சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில், காமராஜர் சாலையில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில் குறிப்பிடுகையில்., "நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 124ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், சென்னை, மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு இன்று(23.01.2020) காலை 10.00 மணியளவில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.


தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் தலைமையிலான அரசு, தமிழ்ச் சான்றோர்கள், விடுதலைப் போராட்ட தியாகிகள் மற்றும் தலைவர்கள் ஆகியோரை பெருமைப்படுத்தும் வகையில், அவர்களுடைய பிறந்தநாளன்று தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி, விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்த தினமான ஜனவரி 23ஆம் நாள், ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.


அதன்படி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில் சென்னை, மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு இன்று(23.01.2019) மாண்புமிகு மீன்வளம், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் திரு. டி. ஜெயக்குமார், மாண்புமிகு ஊரகத் தொழில்துறை அமைச்சர் பா. பென்ஜமின் அவர்கள், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத்துறை அமைச்சர் க. பாண்டியராஜன் அவர்கள், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழக தலைவர் பா. வளர்மதி அவர்கள் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.


இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசுச் செயலாளர் மகேசன் காசிராஜன், இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் முனைவர் பொ. சங்கர், இ.ஆ.ப., கூடுதல் இயக்குநர்(மக்கள் தொடர்பு) திரு. உல. இரவீந்திரன், துணை இயக்குநர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்" என குறிப்பிடப்பட்டுள்ளது.