அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, தற்போது வரை இந்த ரெய்டு கோவை, சென்னை, கோவை, திருச்சி, திருப்பூர், சேலம், ஈரோடு, நாமக்கல், செங்கல்பட்டு, ஆந்திரா, கர்நாடகா என 69 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாட்டில் முதல்வர் மு.க ஸ்டாலின் (MK Stalin) தலைமையிலான திமுக அரசு (DMK) ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு இடங்களில் அவ்வப்போது ரெய்டுகள் நடைபெற்று வருகிறது. இந்த ரெய்டானது முக்கியமாக மாஜி அமைச்சர்கள் பலர் மற்றும் முந்தைய ஆட்சியில் முறைகேடு செய்த அதிகாரிகள் என தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையின் ரெய்டில் சிக்கி வருகிறார்கள். 


ALSO READ | எச்சில் துப்பி ஸ்பெஷல் ரொட்டி செய்த சமையல்காரர்; ரெய்டு விட்ட போலீசார்: வைரல் வீடியோ


இந்த நிலையில் தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி (Thangamani) வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாலை முதல் ரெய்டு நடத்தி வருகிறது. கோவை, நமக்கல், ஈரோடி, சேலம், சென்னை என 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது.


இந்த ரெய்டை தொடர்ந்து தங்கமணி, அவரது மனைவி, மகன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு செய்துள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக தங்கமணி மற்றும் குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அதன்படி தற்போது அவரது மகன் 2வது குற்றவாளியாகவும், மனைவி 3வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். அமைச்சகராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.85 கோடி சொத்து சேர்த்ததாக தங்கமணி, மனைவி சாந்தி, மகன் தரணிதரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


அதேபோல் சென்னையில் மட்டும் 14 இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. சட்ட விரோதமாக சேர்த்த சொத்துக்களை இவர் கிரிப்டோ கரன்சியில் தங்கமணி முதலீடு செய்துள்ளதாகவும் போலீசார் எப்ஐஆரில் தெரிவித்துள்ளனர்.



முன்னதாக அதிமுகவை சேர்ந்த மாஜி அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டது. அவரிடம் இருந்து தொடங்கிய ரெய்டு பின்னர் அதிமுகவின் மூத்த தலைவர்கள் முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, கேசி வீரமணி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டது. 


கடைசியாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது. ரெய்டுகளை தொடர்ந்து இவர்கள் மீது வழக்கும் பதியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR