போலீஸ் உருவத்தில் வந்த ’ஆபத்பாந்தவன்’ - ரயிலில் சிக்க இருந்த தாய், சேய் மீட்பு
மயிலாடுதுறையில் ரயிலில் சிக்க இருந்த தாய் மற்றும் சேயை பத்திரமாக காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்பு படை காவல் ஆய்வாளருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
மயிலாடுதுறை அருகே உள்ள சோழம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் மங்களம். இவர் வியாழக்கிழமை மதியம் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் இருந்து சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னைக்கு புறப்பட்டார். அவரை வழியனுப்புவதற்காக அவரது மகள்கள் தையல்நாயகி மற்றும் கவிதா ஆகியோர் உடன் வந்துள்ளனர். தந்தை மங்களத்தை ரயிலில் ஏற்றி இருக்கையில் அமர வைத்துவிட்டு மகள்கள் இருவரும் பேசிக்கொண்டு இருந்துள்ளனர்.
ALSO READ | அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்தை ’வேங்கை மகன்’ என புகழ்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அப்போது ரயில் புறப்பட்டதால் சகோதரிகள் இருவரும் அவசரமாக ரயிலை விட்டு கீழே இறங்கினர். கவிதா தனது குழந்தையுடன் கீழே இறங்கும் போது தடுமாறி விழுந்துள்ளார். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் சுதீர்குமார் கண்ணிமைக்கும் நேரத்தில் சுதாரித்துக்கொண்டு, ஓடிச்சென்று நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையே விழுந்த கவிதாவையும், அவரது 8 மாத குழந்தையையும் தனது கால்களால் தாங்கிப் பிடித்து எந்தவித காயமும் இன்றி காப்பாற்றினார். இதில் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் சுதீர்குமாருக்கு, காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
ALSO READ | கோவையில் கஞ்சா விற்பனை செய்த தென்னாப்பிரிக்க மாணவர் கைது
தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் சுதிர்குமார், உதவி ஆய்வாளர்கள் தனசேகரன், துரைசிங்கம், காவலர் அருள்குமார் உள்ளிட்ட ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய சகோதரிகளுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். தன் உயிரைப் பணையம் வைத்து தாய், குழந்தையை மீட்ட ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் சுதீர்குமாரின் சமயோசித்த செயலுக்கு உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR