கோவையில் கஞ்சா விற்பனை செய்த தென்னாப்பிரிக்க மாணவர் கைது

 கஞ்சா விற்பனை தென்னாப்பிரிக்க வாலிபரை சரவணம்பட்டி போலீசார் கைது செய்தனர்

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jan 19, 2022, 03:28 PM IST
கோவையில் கஞ்சா விற்பனை செய்த தென்னாப்பிரிக்க மாணவர் கைது title=

கோவை: கல்லூரியில் படிப்பதற்காக வந்த தென்னாப்பிரிக்க மாணவர் ஒருவர் கோவையில் கஞ்சா விற்பனை செய்வதை அறிந்த போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

கோவையிலேயே செட்டில் ஆகி கஞ்சா விற்பனை செய்த ருவாண்டா நாட்டை சேர்ந்த வாலிபரை சரவணம்பட்டி போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை சரவணம்பட்டியை அடுத்த  சின்னவேடம்பட்டி பகுதியில் தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்களை (College Students) குறிவைத்து சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலறிந்த போலீசார், அந்தப் பகுதியில் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

ALSO READ | மாணவருக்கு பதிலாக பள்ளிக்கு செல்லும் ரோபோ!

அவரை சோதனை செய்ததில் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீசார்  விசாரணை நடத்தினார்கள்.

ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள ருவாண்டா நாட்டைச்சேர்ந்த செர்பின்ஸ் என்பது விசாரணையில் தெரியவந்தது. 

தற்போது 32 வயதாகும் செர்பின்ஸ், கோவைக்கு படிக்க வந்துவிட்டு, பிறகு இங்கேயே தங்கி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும், விசா காலம் முடிவடைந்துவிட்டதும் தெரியவந்தது.

விசா கலாவதியாகி ஓராண்டு ஆகியும், செர்பின்ஸ் சட்டவிரோதமாக கோவையில் தங்கி இருந்ததும் தெரியவந்தது.

இதன் அடிப்படையில் செர்பின்ஸை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 2.5 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

ALSO READ | நிலா பெண்ணாக 11 வயது சிறுமி தேர்வு! பாரம்பரிய சடங்குகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News