தருமபுரியில் குடிசை வீட்டில் பெட்டி பெட்டியாக போதை ஊசிகளை கைப்பற்றிய போலீஸார்!
தருமபுரி மாவட்டம் பல்வேறு இடங்களில் மருத்துவ துறையில் வலிநிவாரணத்திற்கு பயன்படுத்தும் ஊசியை போதைக்காக பயன்படுத்துவது குறித்து காவல் துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது.
தருமபுரி மாவட்டம் பல்வேறு இடங்களில் மருத்துவ துறையில் வலிநிவாரணத்திற்கு பயன்படுத்தும் ஊசியை போதைக்காக பயன்படுத்துவது குறித்து காவல் துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது.
அதனை அடுத்து தருமபுரி சரக மருந்தக ஆய்வாளர் சந்திராமேரி தலமையிலான அதிகாரிகள் நகர காவல் துணை கண்காணிப்பாளர் வினோத் தலைமையில் பாதுகாப்புடன் கோம்பேரி கிராமத்தை சேர்ந்த வஜ்ரவேல் (47) என்பவர் போதைக்காக ஊசியை பயன்படுத்துவது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் தருமபுரி நகரில் உள்ள ஒரு மருந்தகத்தின் உரிமையாளர் மோசசுந்தரம் என்பவரிடம் போதை ஊசி வாங்கியது தெரியவந்தது. அவரிடம் விசாரணை செய்ததில் அவர் பெங்களூரு பகுதியில் இருந்து காமராஜ் என்பவர் வாங்கி வந்து தருமபுரி நகரில் புழகத்தில் விட்டது தெரிய வந்தது.
மேலும் இதுகுறித்து இவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் சாமிசெட்டிபட்டி கிராமத்தில் உள்ள முருகேசன் என்பவருக்கு தொடர்பு உள்ளதும் தெரிய வந்தது. இவர்களிடம் விசாரணை செய்ததில் ஏலகிரி கிராமத்திலுள்ள நண்பர் ஒருவரது குடிசை வீட்டில் போதை ஊசிகள் பெட்டி பெட்டியாக பதுக்கி வைத்திருப்பதை மருந்து கட்டுபாட்டு அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்துள்ளனர்.
போதை ஊசி தொடர்பாக வஜ்ஜிரவேல், காமராஜ், முருகேசன், சோமசுந்தரம் உள்ளிட்ட நான்கு பேரிடமும் அதியமான் கோட்டை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். போதைக்காக ஊசி பயன்படுத்தி வந்ததது கண்டுபிடிக்கபட்டுள்ள சம்பவம் தருமபுரியில் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடல் வலி நிவாரணிக்கு மருத்துவர்களால் பரிந்துரைத்த பிறகே பயன்படுத்தக்கூடிய குறிப்பிட்ட ஊசியினை போதைக்காக பயன்படுத்தி வந்துள்ளதாக மருந்து கட்டுபாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | முகத்தின் அழகை சீர்குலைக்கும் ‘கருவளையங்களை’ விரட்ட சில எளிய டிப்ஸ்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR