இபிஎஸ் வைத்த குற்றச்சாட்டு... உடனே முதல்வர் ஆக்சன் - சபாநாயகர் சொன்னது என்ன?
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர் பேசும்போதும், கேள்வியெழுப்பும் போதும் நேரலை ஒளிபரப்பவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு வைத்த நிலையில், சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது தொடர்ந்து, நடைபெற்று வருகிறது. மானியக் கோரிக்கை மீதான விவாதம், கேள்வி - பதில் நேரம் உள்ளிட்ட நிகழ்ச்சி நிரல்கள் சட்டப்பேரவையில் பின்பற்றப்படுகின்றன. அதே நேரத்தில், தற்போது சட்டப்பேரவை நிகழ்வுகளும் ஒளிபரப்பப்படுகின்றன.
அந்த வகையில், இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது, விருத்தாசலத்தின் திமுக கவுன்சிலர் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய விவகாரம் குறித்து எடப்பாடி பழனிசாமி தனி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். மேலும், இந்த தீர்மானத்தின் மீது முதலமைச்சர் ஸ்டாலின் பதில் அளித்து பேசினார்.
தொடர்ந்து, சட்டப்பேரைவை காலை நிகழ்வுக்கு பின், எடப்பாடி பழனிசாமி செய்தியாளரை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"பாலியல் புகார் உள்ளானவர் திமுகவை சேர்ந்தவர் ஆளுங்கட்சியை சேர்ந்தவர். அவர் மீது நடவடிக்கை எடுக்க கால தாமதமானது, இது கண்டிக்கத்தக்கது. பெண் குழந்தைக்கு ஏற்பட்டுள்ள நிகழ்வுக்கு தற்போது மக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. ஜீரோ ஹவரில் நான் பேசிய பேச்சுக்கள் லைவில் வரக்கூடாது என்பதை மெய்ப்பிக்கும் வகையில் லைவை முடக்கியுள்ளனர்" என குற்றஞ்சாட்டினார்.
மேலும்,"சபாநாயகர் ஆளுங்கட்சியின் சிக்னலை பார்த்து செயல்படுகிறார், நடுநிலையாக செயல்படவில்லை. திமுக ஆட்சிக்கு வந்ததும் சட்டப்பேரவையில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் நேரலை செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர், அமைச்சர்கள் பேசுவதை நேரடி ஒளிபரப்பு செய்வதை போல் எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதையும் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும், ஏன் அதை நிறைவேற்றவில்லை?
கேள்வியை ஒளிபரப்பாமல் பதிலை மட்டும் ஒளிபரப்பினால் மக்களுக்கு எப்படி தெரியும். ஒவ்வொரு ஆட்சியிலும் எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர் வராத போது எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருப்பவர்தான் சட்டப்பேரவையில் செயல்படுவது வழக்கம். கட்சி விவகாரம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு முடிந்த பின்னரும், எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை ஒதுக்காதது ஏன்?" எனவும் கேள்வியெழுப்பியிருந்தார்.
இந்நிலையில், சட்டப்பேரவை தலைவர் அப்பாவு எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ளார். அதில்,"கேள்வி நேரம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. முதல்வர் தெரிவித்த நிலையில், இன்றில் இருந்து நிகழ்ச்சி நிரலில் என்ன இருக்கிறதோ, அதையும் நேரலை வழங்கப்பட வேண்டும். இதனை முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.
இனி வரும் காலங்களில் நிகழ்ச்சி நிரலில் உள்ளவை நேரலை வழங்கப்படும். மேலும் படிப்படியாக நேரலை செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். சம வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. படிப்படியாக ஜீரோ ஹவர் உட்பட அனைத்தும் நேரலை வழங்கப்படும்" என்றார்.
மேலும் படிக்க | மு.க.ஸ்டாலின் ஆட்சியில்தான் பெண் போராளிகள் வெளியில் தெரிகின்றனர் - திருச்சி சிவா!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ