எதிர்க்கட்சிகள் பேசினால் நேரலையில் கட் செய்கிறார்கள் - இபிஎஸ் குற்றச்சாட்டு

Edappadi Palanisamy: தமிழ்நாடு சட்டப்பேரவை நடுநிலையாக செயல்படவில்லை எனவும் சபாநாயகர் பாரபட்சமாக செயல்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்துள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Apr 12, 2023, 01:38 PM IST
  • சிறுமி பாலியல் வன்கொடுமை விவாகரத்தில் நேற்றிரவு புகார் அளிக்கப்பட்டது - இபிஎஸ்
  • புகார் அளித்து 13 மணிநேரத்திற்கு பிறகு வழக்குப்பதிவு - இபிஎஸ்
எதிர்க்கட்சிகள் பேசினால் நேரலையில் கட் செய்கிறார்கள் - இபிஎஸ் குற்றச்சாட்டு title=

EPS Pressmeet: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"இன்றைய தினம் சட்டப்பேரவையில் ஜீரோ ஹவரின் விருத்தாச்சலத்தில் நடைபெற்ற பாலியல் தொல்லை தொடர்பாக பேசினேன்.

எஃப்ஐஆர் போடவில்லை

குழந்தையின் நிலைகுறித்து விருத்தாச்சலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அரசு மருத்துவமனை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலத்தில் 1ஆம் வகுப்பு படிக்கின்ற பெண் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் அந்த குழந்தை சேர்க்கப்பட்டது.

நேற்று (ஏப். 11) இரவு வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தற்போது முதல்வர் அவர் கட்சியை விட்டு நீக்கி இருக்கிறோம் என தெரிவித்திருக்கிறார். இன்று காலை 9 மணி வரை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. அந்தப் பள்ளியின் உரிமையாளரும், விருத்தாச்சலம் நகராட்சியின் 30ஆவது வார்டு திமுக கவுன்சிலருமான பக்கிரிசாமியை விருதாச்சலம் காவல் துறையினர் அழைத்துச் சென்றார்கள். 

மேலும் படிக்க | UKG சிறுமிக்கு பாலியல் தொல்லை... திமுக கவுன்சிலர் கைது - ஸ்டாலின் அளித்த பதில் என்ன?

கொடூரமான சம்பவம்

அழைத்துச் சென்றும் அவர் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்யவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருகிறது. பிஞ்சு குழந்தைகள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். விருதாச்சலத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் கொடூரமான சம்பவம். பள்ளியின் உரிமையாளரே குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் இது திறமையற்ற அரசாங்கம் என்பது இதன் மூலம் தெரிகிறது. இந்த குழந்தைக்கு ஏற்பட்டிருக்கிற கொடுமையான சம்பவம் சட்டமன்றத்தில் பேசும்போது அதனை நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படவில்லை. இதனால் எதிர்க்கட்சிகள் பேசக்கூடிய மக்கள் பிரச்சனைகள் மக்கள் அறிந்து கொள்ள முடியவில்லை.

பாலியல் புகார் உள்ளானவர் திமுகவை சேர்ந்தவர் ஆளுங்கட்சியை சேர்ந்தவர். அவர் மீது நடவடிக்கை எடுக்க கால தாமதமானது, இது கண்டிக்கத்தக்கது. பெண் குழந்தைக்கு ஏற்பட்டுள்ள நிகழ்வுக்கு தற்போது மக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. ஜீரோ ஹவரில் நான் பேசிய பேச்சுக்கள் லைவில் வரக்கூடாது என்பதை மெய்ப்பிக்கும் வகையில் லைவை முடக்கியுள்ளனர்.

காங்கிரஸுக்கு உண்டு அதிமுகவுக்கு கிடையாதா?

சபாநாயகர் ஆளுங்கட்சியின் சிக்னலை பார்த்து செயல்படுகிறார், நடுநிலையாக செயல்படவில்லை. திமுக ஆட்சிக்கு வந்ததும் சட்டப்பேரவையில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் நேரலை செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர், அமைச்சர்கள் பேசுவதை நேரடி ஒளிபரப்பு செய்வதை போல் எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதையும் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும், ஏன் அதை நிறைவேற்றவில்லை?

கேள்வியை ஒளிபரப்பாமல் பதிலை மட்டும் ஒளிபரப்பினால் மக்களுக்கு எப்படி தெரியும். ஒவ்வொரு ஆட்சியிலும் எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர் வராத போது எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருப்பவர்தான் சட்டப்பேரவையில் செயல்படுவது வழக்கம். கட்சி விவகாரம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு முடிந்த பின்னரும், எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை ஒதுக்காதது ஏன்? 

அங்கு காவல் துறை இல்லையா?

திமுக அரசு ஒரு சர்வாதிகார அரசாக செயல்படுகிறது. 18 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட காங்கிரஸ் கட்சிக்கு துணைத் தலைவர் பதவி கொடுக்கப்பட்டது. 60-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அதிமுகவுக்கு துணைத் தலைவர் இருக்கை ஏன் வழங்கவில்லை. கடலூர் மாவட்டம் விருதாச்சலம் குழந்தை பாலியல் துன்புறுத்தல் ஆளாக்கப்பட்டது குறித்து நேற்று இரவே பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.

சம்பவம் நடந்து 13 மணி நேரம் ஆன பிறகு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 13 மணி நேரம் அந்தப் பகுதியில் காவல்துறை இல்லையா, காவல்துறை செயல்படவில்லையா?. அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் 5 லட்சம் பேருக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படும் என தெரிவித்து அதில் 90% சதவீதம் பேருக்கு கொடுத்தோம். ஆனால் தற்போது திமுக ஆட்சியில் 7 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது. உதவித்தொகை நிறுத்தப்பட்டவை குறித்து ஆய்வு நடத்த வேண்டும்" என்றார்.

மேலும் படிக்க | Online Rummy Ban Bill: இனி ஆன்லைனில் ரம்மி விளையாடினால்.. இவ்வளவு தண்டனையா? ஜாக்கிரதை!
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News