தமிழகத்தில், டெல்டா, ஒமிக்ரான் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மத்திய அரசிடமிருந்து பெற்ற வழிகாட்டுதல்களை பின்பற்றி, கீழ்கண்ட வகையில் நடவடிக்கைளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாஸ்க அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா நெறிமுறைகளை கடுமையாக பின்பற்றுதல் ஆகியற்றை அரசு வலியுறுத்தியுள்ளது.  



 தடுப்பூசி போடாமல் இருப்பவர்கள், இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட வேண்டியவர்கள், 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள்,  ஆகியோரை 3.1.2022 முதல் இந்த வாரத்திற்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி ஊக்குவித்தல். 


3. கொரோனா விதிமுறைகளை மூறுபவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க தயங்கக்கூடாது.


ALSO READ | சென்னை: ரெம்டெசிவரை பதுக்கியவர்கள் உட்பட 409 பேர் மீது குண்டர் சட்டம்


4. கோவிட் சிகிச்சைக்காக தற்போது  உள்ள 1.15 லட்சம் படுக்கைகள் முழுமையாக செயல்படுவதை உறுதி செய்தல் மற்றும்


5. கூடுதலாக 50,000 படுக்கைகள், குறிப்பாக கோவிட் பராமரிப்பு மையங்கள், குடியிருப்புகள் மற்றும் தெருக்கள் அல்லது வார்டுகளை ஒட்டியுள்ள இடைக்கால கோவிட் பராமரிப்பு மையங்கள் உள்ளிட்டவை முழுமையாக செயல்படத் தொடங்கியுள்ளதை உறுதி செய்தல்


கொரோனாவை கட்டுப்படுத்த அரசு போதுமான மருந்துகளை வழங்கியுள்ளதோடு, போதுமான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளையும் செய்துள்ளது. தமிழ்நாட்டில் குறிப்பாக இப்போது சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் அதிகரித்து வரும் தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கையை தொடர்ந்து கண்காணித்து, அரசு மதிப்பாய்வு செய்து வருகிறது.


"கொரோனா 3வது அலையில் ஒமிக்ரான் மற்றும் டெல்டா வேரியண்ட் என இரண்டு வைரஸ்களும் ஒருசேர மக்களை பாதித்து வருகிறது. நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதை பார்க்கும்போது, அச்சம் ஏற்படுகிறது. ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டவர்களுக்கு 3 முதல் நான்கு நாட்களில் நெகடிவ் வந்துவிடுகிறது. இருப்பினும், 5 நாட்கள் வரை தங்கவைத்து மீண்டும் டெஸ்ட் எடுத்து, அதில் நெகடிவ் வந்தால் மட்டுமே வீட்டுக்கு அனுப்பப்படுகிறார்கள்" என சுகாதார அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார். 


ALSO READ | தமிழகத்தில் கடந்த ஆண்டைவிட இந்த புத்தாண்டிற்கு மது விற்பனை குறைவு!