சென்னை: மகளிருக்கு பேருந்தில் இலவச பயணம் எனக்கூறிவிட்டு ஆண்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வருகிறது. மகளிருக்கான இலவச பேருந்து பயணத்தில் ஏற்படும் இழப்பை ஆண்கள் தலையில் சுமத்திவதை முதலில் நிறுத்துங்கள். புதிய விதிகளை அரசு போக்குவரத்து கழகங்கள் கடைபிடிப்பது அரசாணைக்கு எதிரான செயல் என எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம் (O. Panneerselvam) குற்றம் சாட்டியிருந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கு பதிலளித்த போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் (Transport Ministers Raja Kannappan), சாதாரண நகரப் பேருந்துகளில் இதுவரை 6 கோடியே 53 லட்சம் மகளிர் இலவசமாக பயணம் செய்துள்ளனர். எந்தவித டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படவில்லை. கட்டணத்தில் எந்த மாற்றமும் செயப்படவில்லை. ஏற்கெனவே இருக்கும் கட்டணத்தில் தான் பயணிகள் பயணிக்கின்றனர். எங்காவது தவறு நடந்தால், தவறு செய்த ஒரு நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மகளிர் இலவச பயணம் தொடர்பான ஓ.பன்னீர் செல்வத்தின் கருத்து தவறானது மற்றும் பொதுவாக குற்றஞ்சாட்ட கூடாது. தமிழக முதல்வரின் நற்பெயரைக் கெடுக்கவே, போக்குவரத்துத் துறை மீது ஓ. பன்னீர்செல்வம் குற்றம் சாட்டுகிறார். என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார்.


மேலும், சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனை (VCK Founder Thol. Thirumavalavan) நான் பிளாஸ்டிக் சேரில் அமர வைத்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. எனது நண்பரான திருமாவளவன் அவராகவே பிளாஸ்டிக் சேரில் அமர்ந்தார். இதை பெரிது படுத்த அவசியமில்லை என்று இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் அமைச்சர் ராஜகண்ணப்பன்.


ALSO READ | விரைவில் குடும்ப தலைவிக்கு ஊக்கத்தொகை - அதிகரிக்கும் புதிய ரேஷன் அட்டை விண்ணப்பங்கள்


நேற்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், மகளிருக்கான இலவசமாகப் பயணம் செய்ய அனுமதிக்கப்படும் பேருந்துகளில், அந்த இழப்பை ஈடுசெய்யப் பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களிடம் குறைந்தபட்சக் கட்டணம் 5 ரூபாயிலிருந்து 10 ரூபாயாக உயர்த்தி வசூலிக்கப்படுவதாக குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | கடைகள், வழிபாட்டு தலங்களை மூடும் அரசின் முடிவு வரவேற்கதக்கது: OPS


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR