சென்னை: தனது தேர்தல் அறிக்கையில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்தில் உள்ள குடும்ப தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் அக்கட்சியின் தலைவர், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதேபோல பல நிவாரணத் திட்டங்களையும் திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. தாங்கள் அறிவித்த நலத்திட்டங்களை ஒவ்வொன்றாக செயல்படுத்தி வருகின்றனர்.
அந்தவரிசையில் திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 நிவாரணம் அளிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 கொடுக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
குடும்ப அட்டையின் அடிப்படையில் குடும்ப தலைவிக்கு ஊக்கத்தொகை அளிக்கப்படும் என்பதால், தற்போது புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதாவது இதுவரை குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்காதவர்கள், புதிதாக திருமணம் ஆனவர்கள் என அனைத்து தரப்பினரும் தற்போது ரேசன் அட்டைக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வந்ததால், ஏழை மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில், அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.4000 நிவாரண தொகை அறிவிக்கப்பட்டது. அதனுடன் 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
ALSO READ | கால தாமதம் வேண்டாம்! உடனடியாக புதிய ரேஷன் அட்டைகளை வழங்க வேண்டும்: முதல்வர் உத்தரவு
திமுக தனது தேர்தல் அறிக்கையில், "அனைத்து அரசு வேலை வாய்ப்புகளிலும் பெண்கள் இடஒதுக்கீடு 30 விழுக்காட்டில் இருந்து 40 விழுக்காடு ஆக்கப்படும். பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்களை களைய, சைபர் காவல் நிலையங்கள் உருவாக்கப்படும். மகளிருக்கு பேறுகால உதவித் தொகை 24 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும். அரசுப் பணி மகளிருக்கு பேறுகால விடுமுறை 12 மாதமாக உயர்த்தப்படும். சிறப்பு தாய் சேய் நலத்திட்டம் என்ற பெயரால் கருவுற்ற பெண்களுக்கு வீடு தேடி மருத்துவ வசதி வரும். கொரோனா கொடுந்தொற்று காலத்தில் வாழ்வாதாரம் இழந்து தவித்த அரிசி அட்டை வைத்துள்ள குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும். நியாய விலைக் கடைகளில் மாதம் ஒரு கிலோ சர்க்கரை கூடுதலாகத் தரப்படும். உளுந்தம் பருப்பு மீண்டும் வழங்கப்படும் உட்பட சில திட்டங்கள் குடும்ப அட்டைக்காரர், குடும்பத்தலைவி மற்றும் பெண்களுக்கு அளித்த சில முக்கிய வாக்குறுதிகள் ஆகும்.
ALSO READ | TN Lockdown: தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஒரு வாரம் நீட்டிப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR