COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வருடம் மொழி பாடத்தில், 200-க்கு 200 மதிப்பெண் வழங்க, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. எனவே தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப்பாடத்தில் மாணவர்கள் எவரும் 200க்கு 200 மதிப்பெண் பெறவில்லை.


பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஆன்லைனில் வெளியானது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 92.1 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.


பிளஸ் 2 தேர்வு முடிவில் கணிதப் பாடத்தில் அதிக அளவில் 3,656 மாணவ-மாணவிகள் 200-200 பெற்று அசத்தியுள்ளனர். கணக்கு பதிவியல் பாடத்தில் 5597 பேர் மாணவ-மாணவிகள் அதிக மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.


200-200 மதிப்பெண் பாட வாரியான விவரம்:-


கணினி அறிவியல் 1,647


வேதியியல் - 1,123


உயிரியல்- 221


இயற்பியல் - 187


தாவரவியல்- 22


விலங்கியல்-4 


கணக்கு பதிவியல் - 5597, 


வணிகவியல் - 8301, 


வரலாறு - 336, 


பொருளாதாரவியல் - 1,717 


இந்த ஆண்டு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப்பாடத்தில் மாணவர்கள் எவரும் 200க்கு 200 மதிப்பெண் பெறவில்லை.