கேங்மேன் பணிக்காக விரைவில் 5000 பேர் நியமிக்கப்பட இருப்பதாஎக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் தங்கமணி இந்த தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் பருவமழை காலம், புயல் உள்ளிட்டவைகளை சமாளிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


மின் வாரியத்தில் புதியதாக கேங்மேன் பயிற்சி என்ற பெயரில் பதவி உருவாக்கப்பட்டு 5000 பேர் நேரடி நியமனம் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கான கல்வி தகுதி 5-ம் வகுப்பு ஆகும். 


இதன் மூலம் இத்தனை காலமாக ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி ஊழியர்கள் இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது, எனினும் இந்த பணிக்கு ஆன் லைனில் விண்ணப்பம் பெறப்பட்டு, தேர்வின் அடிப்படையிலேயே பணி ஆணை அளிக்கப்படும் என தெரிகிறது.


கிடைக்கப்பெற்ற தகவல்கள் படி, இதற்கான விண்ணப்பங்கள் http://www.tangedco.gov.in/ என்ற தளத்தில் கிடைக்கும் எனவும், விண்ணப்ப கட்டணம் SC, ST, மாற்று திறனாளிகளுக்கு ரூ.500 எனவும், மற்ற பிரிவினருக்கு ரூ.1000 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிகிறது.