பொறியியல் துறையில் இருக்கும் 624 காலிப் பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை டிஎன்பிஎஸ்சி வலைதளத்தில் ஆன்லமூலம் சமர்பித்து தேர்வுக்காக தங்களை தயார் செய்து வந்தனர். முன்பு வெளியிடப்பட்டிருந்த அறிவிப்பில் இந்த தேர்வுக்கான எழுத்துத் தேர்வு ஜூன் 26 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஏறத்தாழ 2 மாதங்களுக்கும் மேலாக தேர்வு இருந்த நிலையில், தேர்வுக்கான தேதி தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய அறிவிக்கையின்படி, தேர்வு ஜூலை 2 ஆம் தேதி நடைபெறுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | தேர்வர்களே அலர்ட்; TNPSC குரூப் 4 விண்ணப்பங்கள் இன்றுடன் முடிவடைகிறது


தீவிரமாக தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு, தங்களை தேர்வுக்கு தயார்படுத்திக்கொள்ள மேலும் ஒரு வாரம் கிடைத்துள்ளது. இந்த அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ளார். இதனிடையே, குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலவகாசம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் போன்ற பணியிடங்களுக்கு நடத்தப்படும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை தேர்வாணையத் தலைவர் பாலசந்திரன் வெளியிட்டார். இந்த தேர்வின் மூலம் 7,301 காலி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. 



விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in or www.tnpscexams.in ஆகிய இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். தேர்வு அறிவிப்பாணை வெளியிட்டது முதல் இன்று வரை சுமார் 17.80 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். அறிவிக்கப்பட்ட காலிப் பணியிடத்தில் 81 இடங்கள் விளையாட்டு கோட்டா மூலம் நிரப்பப்படுகிறது. இதில் 274 பேர் கிராம நிர்வாக அலுவலர்களாக நியமிக்கப்படுவார்கள். விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறைப் பதிவுடன் (நிரந்தரப் பதிவு) ஆதார் எண்ணை கட்டாயமாக இணைத்தால் மட்டுமே தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும். பெயர், பிறந்த தேதி, பாலினம், வகுப்பு வாரியான இடஒதுக்கீடு, இடைநிலை கல்விச் சான்று எண் மற்றும் நிரந்தர முகவரி, தொடர்பு முகவரி, அலைபேசி எண், மின்னஞ்சல் போன்ற விவரங்களை நிரந்தரப் பதிவில் சமர்பிக்க வேண்டும். 


மேலும் படிக்க | TNPSC தேர்வில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR