TNPSC தேர்வில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் குருப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 18, 2022, 08:23 PM IST
  • குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியீடு
  • மே மாதம் குரூப் 2 தேர்வு நடைபெறும் என அறிவிப்பு
  • திட்டமிட்டு படித்தால் வெற்றி நிச்சயம்
TNPSC தேர்வில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்? title=

தமிழ்நாடு அரசுப் பணிக்கு நடத்தப்படும் TNPSC குரூப் 2 மற்றும் குரூப் 2 தேர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தேர்வில் வெற்றி பெற்று வேலை வாய்ப்பு பெறுவது எப்படி? என தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். லட்சக்கணக்கானோர் பயிற்சி பெறும் டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்றால், சரியான திட்டமிடல், பயிற்சி இருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றுவிடலாம். அதற்கு முதலில் தேர்வை பற்றிய அடிப்படை புரிதல் இருக்க வேண்டும். 

மேலும் படிக்க | .TNPSC: Group 4 புதிய பாடத்திட்டம் வெளியீடு

தகுதி

டிஎன்பிஎஸ்சி நடத்தும் இந்த தேர்வுகளை எழுத 18 வயது நிரம்பியவராகவும், அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் இளங்கலை படிப்பு முடித்திருக்க வேண்டும். இந்த தகுதி இருப்பவர்கள் குரூப் 1 மற்றும் குரூப் 2, 2 ஏ தேர்வுகளை எழுதலாம். குரூப் 4 உள்ளிட்ட விஏஓ தேர்வுகளுக்கு 10 ஆம் வகுப்பு கல்வித்தகுதி இருந்தால் போதும். 

தேர்வு

குரூப் II தேர்வில் முதல் நிலை தேர்வு (PRELIMINARY), முதன்மை தேர்வு (MAINS), நேர்காணல் என தேர்வுகள் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். குரூப் II A பிரிவில் முதல்நிலை தேர்வும் முதன்மை தேர்வும் இருக்கும், நேர்காணல் இருக்காது. முதல்நிலைத் தேர்வு என்பது கொள்குறி வகைத் தேர்வாகவும் (Objective Type), முதன்மைத் தேர்வு என்பது விரிவான எழுத்துத் தேர்வாகவும் (Descriptive Type) இருக்கும். தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் தேர்வை எழுதலாம். 

தமிழ் பிரிவில் தமிழில் 100 கேள்விகள், பொது அறிவில் 75 கேள்விகள், ஆப்டிட்யூடில் 25 கேள்விகள் கேட்கப்படும். ஆங்கிலத்தில் தேர்வெழுத விரும்புவோருக்கு பொது ஆங்கிலத்தில் 100 கேள்விகள், பொது அறிவில் 75 கேள்விகள், ஆப்டிட்யூடில் 25 கேள்விகள் கேட்கப்படும். இவற்றின் மொத்த மதிப்பெண் 300. இதில் டிஎன்பிஎஸ்சி நிர்ணயிக்கும் கட்ஆஃப்-ல் இருப்பவர்களுக்கு பணி நிச்சயம் கிடைக்கும். கட்ஆப் மார்க் என்பது தேர்வு முடிந்த பிறகு டிஎன்பிஎஸ்சி அறிவிக்கும்.  

மேலும் படிக்க | இனி இந்த துறைகளுக்கும் TNPSC தேர்வு - நிதியமைச்சர் அறிவிப்பு

TNPSC அறிவிப்பு

2018 ஆம் ஆண்டு முதல் நடைபெறாத இருந்த குருப் 2 மற்றும் 2 ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 23 ஆம் தேதி இந்த தேர்வுகளுக்கான அரசாணை வெளியாகும். மே 21 ஆம் தேதி தேர்வுகள் நடத்தப்பட்டு, ஜூன் மாத இறுதிக்குள் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. தற்போது 5831 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டாலும், இந்த எண்ணிக்கை மேலும் உயருவதற்கு வாய்ப்புள்ளது. பிப்ரவரி 23 ஆம் தேதி முதல் மார்ச் 23 ஆம் தேதி வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்ச்சி பெறுபவர்களுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி 2023 -ல் கலந்தாய்வு நடைபெறும். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News