இன்றைய நிலவரம்: தமிழகத்தில் 5,981 பேருக்கு புதிதாக தொற்று; 109 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் இன்று 5,981 பேருக்கு கொரோனா தொற்று (Corona Positive) உறுதி செய்யப்பட்டு உள்ளது மற்றும் 109 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னை: தமிழகத்தில் இன்று 5,981 பேருக்கு கொரோனா தொற்று (Corona Positive) உறுதி செய்யப்பட்டு உள்ளது. தலைநகரம் சென்னையில் 1,286 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா (Coronavirus) தொற்றால் 109 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் இன்று 5,870 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். இதுவரை மொத்தம் 343,930 பேர் குணமடைந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் (COVID in Tamil Nadu) பாதிக்கப்பட்டவர்களின் மொத்தம் எண்ணிக்கை 4,03,242 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல மாநிலத்தில் மொத்த இறப்பு எண்ணிக்கை 6,948 ஆக உயர்ந்தது.
ALSO READ | கொரோனா பரவல் அதிகமுள்ள 32 பகுதிகளில் செப்டம்பர் 6 வரை முழு ஊரடங்கு
மேலும் வீட்டில் இருந்தபடியே வீடியோ அழைப்பின் மூலம் கொரோனா நோய் தொற்று தொடர்பான சந்தேகங்கள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் பெற 'GCC Vidmed' செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துங்கள் என சென்னை தெரிவித்துள்ளது.
மேலும் பதிவிறக்கம் செய்ய : https://bit.ly/3g9oq5l என்ற லிங்கை கிளிக் செய்யவும்
கோயம்பேடு மொத்த காய்கறி சந்தை செப்டம்பர் முதல் அன்லாக் நான்காம் கட்டத்தில் மீண்டும் திறக்கப்படும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
ALSO READ | Unlock 4.0: பள்ளி-கல்லூரி மற்றும் ரயில் சேவைகள் செப்டம்பர் 1 முதல் தொடங்கப்படுமா..?
இன்றைய நிலவரம்: 27-08-2020
கொரோனா பாதிப்பு - 5,981
சிகிச்சை பெற்று வருபவர்கள் - 52,364
பரிசோதிக்கப்பட்ட மாதிரிகள் - 76,345
குணமடைந்து வெளியேறியவர்கள் - 5,870
இறப்பு - 109