கொரோனா பரவல் அதிகமுள்ள 32 பகுதிகளில் செப்டம்பர் 6 வரை முழு ஊரடங்கு

அடுத்த மாதம் செப்டம்பர் 6 ஆம் தேதி வரை கொரோனா பரவல் அதிகமுள்ள 32 பகுதிகளில் முழு ஊரடங்கு (Lockdown)  அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Aug 27, 2020, 05:36 PM IST
  • செப்டம்பர் 6 ஆம் தேதி வரை கொரோனா பரவல் அதிகமுள்ள 32 பகுதிகளில் முழு ஊரடங்கு.
  • பாதிக்கப்பட்ட மொத்தம் 12,434 பேரில் 4,483 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • இறப்பு விகிதம் தற்போது 1.51 சதவீதமாகவும், மீட்பு விகிதம் 62.42 சதவீதமாகவும் உள்ளது
  • இதுவரை 7,761 நோயாளிகள் குணமடைந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்
கொரோனா பரவல் அதிகமுள்ள 32 பகுதிகளில்  செப்டம்பர் 6 வரை முழு ஊரடங்கு title=

புதுச்சேரி: அடுத்த மாதம் செப்டம்பர் 6 ஆம் தேதி வரை கொரோனா பரவல் அதிகமுள்ள 32 பகுதிகளில் முழு ஊரடங்கு (Lockdown) அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணி வரை புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 10 நபர்கள் கோவிட் -19 நோய்க்கு பலியாகியுள்ளனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 12,434 ஆகவும், சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4,483 ஆகவும், இதுவரை 190 பேர் இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக வைரஸ் தொற்றால் புதுச்சேரி பிராந்தியத்தில் 461, காரைக்கல் பிராந்தியத்தில் 31, யானம் பிராந்தியத்தில் 13 மற்றும் மஹே பிராந்தியத்தில் ஆறு பேர் என்று சுகாதார அமைச்சர் மல்லடி கிருஷ்ண ராவ் (Health Minister Malladi Krishna Rao) தெரிவித்தார்.

ALSO READ | E - Pass: ஹேப்பி நியூஸ்......புதுச்சேரியில் இ-பாஸ் நடைமுறை ரத்து

பாதிக்கப்பட்ட மொத்தம் 12,434 பேரில் 4,483 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். (மருத்துவமனைகளில் 2,127 மற்றும் வீட்டு தனிமைப்படுத்தலில் 2,356). இதுவரை 7,761 நோயாளிகள் குணமடைந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் கூறினார்.

இறப்பு விகிதம் தற்போது 1.51 சதவீதமாகவும், மீட்பு விகிதம் 62.42 சதவீதமாகவும் உள்ளது.

சுகாதார அமைச்சர் மல்லடி கிருஷ்ண ராவ், முதலமைச்சர் வி நாராயணசாமியுடன் (V Narayanasamy)  சேர்ந்து ஜிப்மர் மற்றும் ஐசிஎம்ஆர் குழுக்கள் மற்றும் கோவிட் -19 காரணமாக இறப்புகளைத் தடுப்பது தொடர்பான பிற நிபுணர்களிடமிருந்தும் கருத்து கோரினார். "நாங்கள் செயல்படுத்தும் சில பரிந்துரைகள் உள்ளன," என்று சுகாதார அமைச்சர் கூறினார்.

ALSO READ | E-Pass இருந்தாலும் புதுச்சேரிக்குள் அனுமதியில்லை முதலமைச்சர் நாராயணசாமி அதிரடி

மத்திய அரசால் நியமிக்கப்பட்ட இருகுழுக்களுடனான தனது கலந்துரையாடலின் போது, ​​மத்திய அரசின் வழிகாட்டுதல்கள் 100 சதவீதம் பின்பற்றப்பட்டு வருவதாகவும், பதிப்பு குறைக்க மேலும் என்ன செய்ய முடியும் என்பதை அறிய விரும்புவதாகவும் கூறினார்.

நாள்தோறும் பரிசோதிக்கப்படும் மாதிரிகளின் எண்ணிக்கை 1486 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வார இறுதிக்குள் இது 2000 ஆகவும், அடுத்த வாரத்திற்குள் 3000 ஆகவும் உயர்த்தப்படும். சோதனையை அதிகரிக்க நிபுணர் குழுக்களும் பரிந்துரைத்துள்ளன. இதற்கான வசதிகள் சுமார் 30 இடங்களில் அமைக்கப்படும்.

Trending News