இன்று தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கு மறைமுக தேர்தல் நடைபெறுகிறது
ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் முடிந்ததை அடுத்து, இன்று ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெறவுள்ளது.
சென்னை: தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை வீடியோ பதிவு செய்யப்பட உள்ளது. மொத்தம் 10306 இடங்களுக்கு மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது.
அதாவது ஊரக உள்ளாட்சி நடந்து முடிந்த மாவட்டங்களில் உள்ள 27 ஊராட்சித் தலைவர் பதவிக்கும், 314 இடங்களில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மற்றும் 9624 இடங்களுக்காக ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடக்க உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. தேர்தல் நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
அதேபோல தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கு டிசம்பர் 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. முதல் கட்டத்தில் 76.19 சதவீதம் வாக்குகள் மற்றும் இரண்டாம் கட்டத் தேர்தலில் 77.73 சதவிகிதம் வாக்குப்பதிவானது.
முன்னதாக, மதுரை உயர் நீதிமன்றத்தில், மறைமுக நடைபெற உள்ள தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடக்க வாய்ப்பு இருப்பதால், தேர்தல் நடவடிக்கைகளை முழுவதுமாக வீடியோவாக பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மறைமுகத் தேர்தல் முழுவதும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் எனக் கூறியது, இதனையடுத்து மாநில தேர்தல் ஆணையம் மறைமுகத் தேர்தல் முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும் என மதுரை உயர்நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.