மாணவர்களின் கவனத்திற்கு! மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்களை பெற கடைசி நாள் இன்று!
தமிழகத்தில் மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்களைப் பெறுவதற்கு இன்று (ஜூன் 18) கடைசி நாளாகும்.
தமிழகத்தில் மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்களைப் பெறுவதற்கு இன்று (ஜூன் 18) கடைசி நாளாகும்.
தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, மாநில மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில், மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்ப வினியோகம், ஜூன் 11 முதல் துவங்கியது. 23 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் விண்ணப்ப விநியோகம் நடைபெற்று வருகிறது. மேலும் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யும் நடைமுறையும் உள்ளது.
விண்ணப்பங்களை நேரில் பெறவும், இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யவும் இன்று(ஜூன் 18) கடைசியாகும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மருத்துவக் கல்வி இயக்ககத்தில் சமர்ப்பிக்க நாளை (ஜூன் 19) கடைசி நாளாகும்.
மேலும் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு ஜூன் 28-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். ஜூலை 1 முதல் ஜூலை 5 வரை முதல் கட்ட மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்களைப் பெறுவதற்கு இன்று (ஜூன் 18) கடைசி நாளாகும்.