இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பிரதமர் மோடியிடம் முக்கிய கோரிக்கை மனுவை கொடுத்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டதாவது:- 


* தமிழ்நாட்டின் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையும் மற்றும் பயிர் காப்பீட்டுத் தொகையும் முழுமையாக வழங்குவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்க           வேண்டும் 


* காவிரி படுகை மேம்பாட்டுத் திட்டமான, தமிழக அரசின் திட்டத்தை தேசியத் திட்டமாக அறிவிக்க சம்பந்தப்பட்ட அமைச்சகத்திற்கு பிரதமர் அறிவுறுத்தல் வேண்டும்.


* கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே கட்டும் அணைகள் மற்றும் தடுப்பணைகளுக்கான கட்டுமான நடவடிக்கைகளையும் கேரள அரசு மேற்கொள்ளக்கூடாது என அறிவுறுத்த     வேண்டும்.


* நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் தமிழக அரசின் சட்ட மசோதாவிற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்று தர பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


* குடிமராமத்து திட்டத்திற்கு தேவையான 500 கோடி ரூபாய் நிதியுதவி மத்திய அரசு அளிக்க வேண்டும்.


* தமிழ்நாட்டிற்கு நிலுவையிலுள்ள 16,959.04 கோடி ரூபாய் மானியங்களை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


* தமிழகத்திற்கு உயர்தர மருத்துவ சிகிச்சை கிடைக்க எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்தின் முக்கிய பகுதி ஏதேனும் ஒன்றில் விரைவில் தொடங்க வேண்டும்.


* இரண்டு மாநிலங்களுக்கும் பலன் பெரும் வகையில் அமைக்கப்பட்ட பம்பாறு இணைப்பு திட்டம் ஒப்புதல் அளிக்க கேரள அரசை வலியுறுத்த வேண்டும்.


*இலங்கை படையினரால் பிடித்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களுக்குச் சொந்தமான 135 படகுகளை விடுவித்து, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 11  இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும்  மீனவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த  வேண்டும்.


இவ்வாறு அந்த மனுவில் வலியுறுத்தி கூறப்பட்டுள்ளது.