மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் 3-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி அவர் காலமானார். அவரது நினைவு தினமான இன்று, அவரது நினைவிடத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினர். தமிழக அமைச்சர்கள் மற்றும் திமுக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று காலை சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் (M.K.Stalin), அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட சில அமைச்சர்கள், டி.ஆர்.பாலு, கனிமொழி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.


மேலும், கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம், ஆழ்வார்பேட்டை இல்லம் ஆகிய இரு இடங்களிலும் கருணாநிதி படத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.


மு.கருணாநிதி 50 ஆண்டுகள் திமுகவின் (DMK) தலைவராகவும், 19 ஆண்டுகள் தமிழக முதல்வராகவும், 13 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | தமிழகத்தில் 2 வாரங்களுக்கு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுகின்றது: முதல்வர் ஸ்டாலின்


தமிழகத்தில், கடந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்று, 10 ஆண்டு காலத்திற்கு பிறகு திமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நினைவு தின நிகழ்ச்சியை பெரிய அளவில் நடத்த திமுக நிர்வாகிகள் திட்டமிட்டிருந்தனர்.


ஆனால், கொரோனா தொற்று இரண்டாம் அலை கட்டுக்குள் வந்துள்ள போதிலும், எண்ணிக்கை சிறிது சிறிதாக அதிகரித்து வருவதால், கொரோனா 3வது அலை பரவல் எச்சரிக்கை காரணமாக, பெரிய அளவில் இல்லாமல், அஞ்சலி செலுத்த விரும்புபவர்கள், வீடுகளில் இருந்த படியே, மு.கருணாநிதி படம் வைத்து அஞ்சலி செலுத்துமாறு கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Also Read | Covid Updates Tamil Nadu: ஆகஸ்ட் 6 தமிழகத்தில் இன்று 1,985 பேருக்கு கொரோனா பாதிப்பு; 30 பேர் பலி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR