தமிழகத்தில் 2 வாரங்களுக்கு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுகின்றது: முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் மேலும் இரண்டு வாரங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 6, 2021, 06:51 PM IST
தமிழகத்தில் 2 வாரங்களுக்கு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுகின்றது: முதல்வர் ஸ்டாலின் title=

தமிழகத்தில் மேலும் இரண்டு வாரங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து விரிவான அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இந்த ஊரடங்கு நீட்டிப்பில் முக்கியமான சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. 

- செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகளை பள்ளிகள் திறக்கலாம் என அறிவிக்கபட்டுள்ளது. 

- 50 சதவிகித மாணவர் வருகையுடன் இந்த வகுப்புகளுக்கு பள்ளிகளைத் திறக்க பள்ளிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. 

ALSO READ: கொடைக்கானலில் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்

- பள்ளிகளில் தேவையான கொரோனா நெறிமுறைகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதை உறுதி செய்யுமாறு தமிழக அரசு தமிழக பள்ளிக் கல்வித் துறையை கேட்டுக்கொண்டுள்ளது.

- ஆகஸ்ட் 16 முதல் மருத்துவக் கல்லூரிகள், மருத்துவம் சார்ந்த கல்லூரிகளைத் திறக்கவும் அரசு முடிவெடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

- விதிகளைப் பின்பற்றாமல் அதிக வாடிக்கையாளர்களை அனுமதிக்கும் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் மீது நடவைக்கை எடுக்கப்படும் என அரசு கூறியுள்ளது.

- நோய்க்கட்டுபாட்டு பகுதிகளில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

- இறைச்சி, மீன் சந்தைகளில் மக்கள் கூடுவதைத் தடுக்க தனித்தனி கடைகளாக பிரித்து விற்பனை செய்ய அறிவிறை வழங்கப்பட்டுள்ளது.

- வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களில் மக்கள் வர அனுமதி இல்லை. பொது மக்கள் அனுமதி இன்றி இந்த நாட்களில் பூஜைகள் மட்டும் நடக்கும்.

ALSO READ: TN District Wise corona update August 05: மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News