தை திருநாள்- தமிழகம் முழுவதும் பொங்கல் விழா கோலாகலம்!
இன்று தமிழகம் முழுவதும் உழவர் திருநாளாம் அறுவடைத்திருநாள் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் தமிழகத்தில் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும்.
இன்று தமிழகம் முழுவதும் உழவர் திருநாளாம் அறுவடைத்திருநாள் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் தமிழகத்தில் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும்.
அந்தவகையில் இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். வீட்டு வாசல்களில் கோலமிட்டு பொங்கல் வைத்து சூரியபகவானை வணங்கினர். தமிழர்களின் பாரம் பரிய கலையினைப் போற்றும் நோக்கில் கரகாட்டம் ஒயிலாட்டம், தப்பாட்டம், சிலம்பாட்டம், கோலாட்டம் போன்ற கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
பொங்கல் பண்டிகையில் உறியடித்தல், கயிறு இழுத்தல், கோலப்போட்டி, சிலம்ப போட்டி, பேச்சுப் போட்டி கட்டுரைப்போட்டி, தண்ணீர் நிரப்புதல், தேங்காய் உடைத்தல் உள்பட பல போட்டிகள் நடைபெறும்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.