ஏழை குடும்பங்களுக்கு ரூ.2000 நிதியுதவி வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இன்று தொடங்கி வைத்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக சட்டப்பேரவையில் அவை விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,‘‘ கஜா புயலாலும், வறட்சியாலும் பாதிக்கப்பட்டுள்ள 60 லட்சம் அமைப்புசாரா தொழிலாளர் குடும்பங்களுக்கு ஒருமுறை சிறப்பு நிதியுதவியாக ரூ.2000 வழங்கப்படும்’’ என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். இந்த புதிய நலத்திட்டத்திற்கு ரூ.1,200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும். இந்த தொகை நேரடியாக அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் எனவும் கூறியிருந்தார்.


இந்தநிலையில், இன்று ஏழை குடும்பங்களுக்கு ரூ.2000 நிதியுதவி வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் தொடங்கி வைத்தார்.