ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு இன்று தண்ணீர் விநியோகம்: கே.சி.வீரமணி
ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலமாக சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் பணிகள் இன்று பிற்பகலில் தொடங்கும்.
சென்னை: ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலமாக சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் பணிகள் இன்று பிற்பகலில் தொடங்கும்.
தமிழகத்தில் தற்போது நிலவி வரும் தண்ணீர் பஞ்சம் மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்ட நிலையில், சென்னையில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. சென்னை நகரவாசிகள் தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். சென்னை நகரம் கிட்டத்தட்ட 200 நாட்கள் வானம் பார்த்த பூமியாக இருப்பதாலும், வெயில் சுட்டெரிப்பதாலும் நீர் நிலைகள் வறண்டுவிட்டன. குறிப்பாக சென்னையில் முக்கிய குடிநீர் ஆதாரங்களான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் வறண்டு போய்விட்டன.
சென்னை முழுவதும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டு நிலவி வரும் நிலையில், பல இடங்களில் உணவகங்கள் மற்றும் ஐடி நிறுவனங்கள் முடக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டன. தமிழகத்தில் நிலவி வரும் தண்ணீர் பஞ்சத்தை போக்க அரசு உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மக்கள் மற்றும் அரசியல் கட்சியினரும் வலியுறுத்தி வந்தன.
தண்ணீர முழுவதும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க பல முயற்ச்சிகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு வர முடிவு செய்து. அதற்க்கான திட்டங்கள் தீட்டப்பட்டு, ரயில் மூலம் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந்த நிலையில், இன்று தமிழக சட்டபேரவையில் அமைச்சர் கே.சி.வீரமணி, ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலமாக சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் பணிகள் இன்று பிற்பகலில் தொடங்கும். சென்னை வில்லிவாக்கம் சென்றடையும் குடிநீர் முறையாக அனைவருக்கும் விநியோகம் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.