தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக தக்காளியின் விலை அதிரடியாக அதிகரித்திருந்தது. இதையடுத்து இன்று, கோயம்பேட்டில் தக்காளியின் வரத்து அதிகரித்துள்ளதால் அதன் விலை கணிசமாக குறைந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உச்சம் தொட்ட தக்காளி விலை:


நாடு முழுவதும் தக்காளிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அதன் விலை இந்தியா முழுவதும் அதிகரித்தது. தக்காளி மட்டுமன்றி பல்வேறு காய்கறிகளின் விலையும் உயர்ந்தது. கடந்த வாரங்களில் ஒரு கிலோ தக்காளி 130 ரூபாயிலிருந்து 180 ரூபாய் வரை விற்கப்பட்டது. இதனுடன் சேர்த்து, சின்ன வெங்காயத்தின் விலையும் அதிகரித்து வந்தது. உச்சம் தொட்ட தக்காளியின் விலையை குறைக்க அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. ஆனால் எதுவும் பலனளிக்காமல் போக, தக்காளியின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருந்தது. மூன்று நாட்கலுக்கு முன்பு வரை, கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளியின் விலை 140 ரூபாய் வரை விற்கப்பட்டது. 


மேலும் படிக்க | தக்காளி பிரியர்களா நீங்கள்...அப்போ உங்களுக்கு ஓர் ''கெட்ட நியூஸ்"


அதிரடி விலை குறைவு:


காய்கறி வரத்து குறைவால் சென்னையில் உள்ள பிரபல சந்தையான கோயம்பேட்டில் தக்காளி அதிக விலை வைத்து விற்கப்பட்டது. இதையடுத்து, கடந்த சில தினங்களாக காய்கறிகளின் வரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தக்காளியின் வரவும் சற்று அதிகரித்துள்ளது. இதனால், இன்று (ஜூலை 19) கோயம்பேட்டில் தக்காளியின் விலை ஒரு கிலோவிற்கு 30 ரூபாய் குறைந்து 90 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதையடுத்து, சில்லறை விற்பனையில் தக்காளி, கிலோ ஒன்றிற்கு 100 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு பிறகு தக்காளியின் விலை குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியில் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். 


விலை உயர்வுக்கு காரணம் என்ன..?


தக்காளியின் விலை கடந்த மாதத்தில் இருந்து அதிகரித்தது. இதற்கு காரணம் என்ன என்று பலரும் ஆராய்ந்தனர். இதில், கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தக்காளி விவசாயிகள் பலர் தக்காளி உழுவதை விட்டுவிட்டு வேறு காய்கறிகளை பயிரிட்டதே இதற்கு காரணம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வேறு காய்கறிகளை பயிரிட்டதற்கு காரணம், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பூச்சுகளால் தக்காளி பழுதடைந்து அவர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதுதான் காரணம் என சொல்லப்படுகிறது. உத்தர பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில்தான் அதிகம் தக்காளிகள் பயிரிடப்படுகிறது. இங்கிருந்துதான் பிற மாநிலங்களுக்கும் தக்காளிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. பூச்சி பிரச்சனை இந்த மாநிலங்களில் எழுந்ததால்தான் தக்காளிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 


முன்னர் விற்கப்பட்ட விலை:


விலை ஏற்றத்திற்கு முன், கோயம்பேட்டில் ஒரு கிலோ 25-30 ரூபாய் வரை மட்டுமே விற்கப்பட்டு வந்தது. ஆனால் இன்றோ, அது 150 ரூபாயை தாண்டி எங்கோ சென்று விட்டது. பல நாட்கள் கழித்து இன்றுதான் தக்காளி 100 ரூபாய்க்கு விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு இந்த ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் மட்டுமே தக்காளியின் விலை 27 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் சிலர் தெரிவிக்கின்றனர். 


அரசின் முன்னெடுப்புகள்:


தமிழக அரசு, இந்த விலையேற்றத்தை தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் குறைவான விலைக்கு தக்காளியை மக்களுக்கு விநியோகிக்க சந்தைகளையும் அரசு ஏற்படுத்தியது. இது மக்களுக்கு ஓரளவு பயணளித்தது. ஆனால், இதனால் பெரிதாக மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. ஒரு வியாபாரி, தன் தக்காளியை காப்பாற்ற பவுன்சர்களை நியமித்தார். இது பரபரப்பாக பேசப்பட்டது. 


மேலும் படிக்க | ஒரே மாதத்தில் காேடீஸ்வரனாக மாறிய தக்காளி விவசாயி..! எப்படி தெரியுமா..?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ