தக்காளி வரத்து குறைவு காரணமாக மாநிலம் முழுவதும் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 100 ரூபாய் வரை விற்கப்படுவதால் பொதுமக்கள் தக்காளி பயன்படுத்துவதையே தவிர்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த சூழலில் தக்காளி குடோன்களில் பதுக்கி வைக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. குறிப்பாக சேலம் மாவட்டத்தை பொருத்தவரையில் தக்காளி விளைச்சல் ஆண்டுமுழுவதும்  சராசரியாக இருக்கும். மேச்சேரி, மேட்டூர், நங்கவள்ளி, ஜலகண்டாபுரம், ஆத்தூர், தலைவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் தக்காளி வரத்து சேலம் மார்க்கெட்க்கு கணிசமாக கிடைக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனால் தக்காளி விலை மற்ற இடங்களில் அதிகமாக காணப்பட்டாலும் சேலத்தில் சராசரி விலையாகவே இருக்கும். அந்த வகையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தக்காளியின் விலை கிலோ 10 ரூபாய் 20 ரூபாய் என விற்பனை செய்யப்பட்ட நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தக்காளி  வரத்து கணிசமாக குறைந்தது. அதனால் திடீரென கிலோ ஒன்று 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் வெளி மாவட்ட மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து சேலத்திற்கு வந்து கொண்டிருந்த தக்காளி குறைந்ததால் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது.


மேலும் படிக்க | அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு உள்ளார் - வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதம்


சேலம் வ.உ.சி மார்க்கெட், ஆற்றோர மார்க்கெட் மற்றும் உழவர் சந்தைகளுக்கு தக்காளி வரத்து குறைந்த அளவை இருந்தது. இதனால் தக்காளி கிலோ ஒன்றுக்கு 80 ரூபாய் முறை முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சேலம் உழவர் சந்தைகளில் இன்று காலை கிலோ 80 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டது. அதே வேளையில் வெளிமார்க்கெட்டுகளில் 100 ரூபாய் மற்றும் 110 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்


 தக்காளி மட்டுமல்லாது இதர காய்கறிகளின் விளையும் உச்சத்தை தொட்டுள்ளது. இந்த நிலையில் தக்காளி விலை மேலும் உயரமான வாய்ப்பு உள்ளதால் வியாபாரிகள் தக்காளியை அதிகளவில் வாங்கி குளிர்சாதன கிடங்கில் பதுக்கி வைக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இது குறித்து பொதுமக்கள் கூறும்போது கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 50 ரூபாய்க்கு விற்ற தக்காளி தற்போது இருமடங்காக உயர்ந்து 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி வரத்து குறைவாக இருந்தாலும் இதனை பயன்படுத்தி வியாபாரிகள் தங்கள் குடோன்களில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதால் செயற்கையாக விளையேற்றம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.


 சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு குடோன்களில் சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ள தக்காளியை பறிமுதல் செய்ய வேண்டும். தக்காளி விலையை குறைக்க போதுமான நடவடிக்கை எடுப்பதோடு கடந்த காலங்களில் தக்காளி விலையேற்றத்தின்போது கூட்டுறவு சங்கங்கள் மூலம் தக்காளி விற்பனை  செய்யப்பட்டதுபோல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்


 இது குறித்து வியாபாரிகள் கூறும்போது பெரிய அளவிலான வியாபாரியிலிருந்து தங்கள் சில்லறை விற்பனைக்காக தக்காளி வாங்கி வந்து குறைந்த அளவில் லாபம் வைத்து விற்பனை செய்வதாகவும்,  பெரிய வியாபாரிகள் தக்காளிகளை பதுக்கி வைத்து செயற்கையாக தட்டுப்பாடு ஏற்படுத்துவதால் இது போன்ற விலையேற்றத்திற்கும் ஒரு காரணம் என்றும் தெரிவித்தனர். 


மேலும் படிக்க | சிதம்பரம்: கனகசபை மீது பக்தர்கள் தரிசனம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து கதவை பூட்டிய தீட்சிதர்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ