சிதம்பரம்: கனகசபை மீது பக்தர்கள் தரிசனம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து கதவை பூட்டிய தீட்சிதர்கள்

கடலூர் சிதம்பரம் கோயிலில் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய தடை என தீட்சிதர்கள் வைத்த பதாகையை அரசு அதிகாரிகள் காவல்துறையினருடன் சென்று அகற்றினர். இதனைத் தொடர்ந்து கனகசபை கதை தீட்சிதர்கள் பூட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 26, 2023, 07:10 PM IST
  • சிதம்பரம் தீட்சிதர்கள் போராட்டம்
  • கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய எதிர்ப்பு
  • கதவை பூட்டி போராட்டம் என தகவல்
சிதம்பரம்: கனகசபை மீது பக்தர்கள் தரிசனம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து கதவை பூட்டிய தீட்சிதர்கள் title=

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தில் வரலாற்று சிறப்பு மிக்க நடராஜர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் கனகசபை சபையில் ஏறி பட்டியல் சமூகத்தை சேர்ந்த ஜெயசீலா என்ற பெண் வழிபடச் சென்றுள்ளார். இதைப்பார்த்த தீட்சிதர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த செயலுக்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், தமிழக அரசு கனகசபை மீது ஏறி வழிபடலாம் என்று கடந்த பதினேழாம் ஆம் தேதி அரசாணை வெளியிட்டது. 

மேலும் படிக்க | அர்ச்சகர்களை கோவில் தக்கார்களே நியமிக்கலாம் - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

இந்த உத்தரவுக்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது. ஆனால், அனைத்து நாட்களிலும் பக்தர்களை தீட்சிதர்கள் அனுமதிப்பது இல்லை என்று ஒருபுறம் தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது. இதற்கிடையே சிதம்பரம் நடராஜர் கோயில் திருவிழாவை முன்னிட்டு, கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்யக்கூடாது என்று தீட்சிதர்கள் அறிவிப்பு பலகை வைத்தனர். இந்த அறிவிப்புப் பலகைக்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  

இதுகுறித்து தகவலறிந்த செயல் அலுவலர் சரண்யா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னறிவிப்பின்றி வைக்கப்பட்ட அறிவிப்புப் பலகையை அகற்ற சென்றனர். அப்போது, அறநிலையத்துறை அதிகாரிகளுடன் கடும் தீட்சிதர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து காவல் நிலையதிலும் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், கடலூர் மாவட்ட இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் சந்திரன் போலீசார் உதவியுடன் கனகசபை மீது வைக்கப்பட்ட பதாகையை அகற்றினர். இதனால் பக்தர்கள் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய முயன்றனர். இதனை தடுத்த தீட்சிதர்கள் கனகசபை கதவை உட்பக்கமாக பூட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து தீட்சிதர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். 

மேலும் படிக்க | திமுகவை அச்சுறுத்த நினைக்கும் பாஜகவின் எண்ணம் கனவிலும் எடுபடாது - கனிமொழி ஆவேசம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News