தமிழ்நாடு முழுவதும் மீண்டும் நாளை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. கடந்த மெகா முகாமில் பலர் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திய நிலையில், பலர் 2வது டோஸை இன்னும் செலுத்தவில்லை என்ற புகார் இருந்து வருகிறது. இந்நிலையில், மீண்டும் நாளை மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது.  தமிழகத்தில் ஆங்காங்கே மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. இதனால் தடுப்பூசி போடும் பணி மீண்டும் மும்முரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை இன்னும் முதல் தவணை தடுப்பூசியே போடாமல் சுமார் 50 லட்சம் பேர் உள்ளதாக சுகாதாரத்துறை கவலைத் தெரிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | 4-ஆம் அலை வேண்டாம் என்றால் மாஸ்க் வேண்டும்! பேரவையிலும் எதிரொலித்த மாஸ்க் விவகாரம்


முதல் டோஸ் செலுத்திக்கொண்டவர்கள், பின்னர் 2வது டோஸ் போட முன்வரவில்லை. கிட்டத்தட்ட, ஒரு கோடியே 48 லட்சம் பேர் 2-வது டோஸ் தடுப்பூசி போடவில்லை என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  இவர்களுக்கு ஒரே நாளில் தடுப்பூசி செலுத்த வசதியாக நாளை 1 லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. காலை 7 மணிமுதல் இரவு 7 மணி வரை நடத்தப்படுகிறது. தவறாமல் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரணியன் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது, ‘2 கோடி பேரை இலக்காக வைத்து முகாம் நடத்தப்படுவது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை. தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களின் பெயர், விபரங்கள் இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. அதை வைத்து வீடு வீடாக சென்று களப்பணியாளர்கள் அழைப்பு விடுத்து வருகிறார்கள். இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் தடுப்பூசிகள் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளன. அதற்கான முழு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 


மேலும் படிக்க | மருத்துவமனைகளை தயார் நிலையில் வையுங்கள் - மருத்துவ கல்வி இயக்குனர் உத்தரவு


இதற்காகவே, நாளை காலை முதல் மாலை வரை ஆத்தூர், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை ஆகிய இடங்களில் 20-க்கும் மேற்பட்ட முகாம்களை நேரில் பார்வையிடுகிறேன். அதை முடித்துவிட்டு, இரவு 7 மணிக்கு சென்னைத் திரும்புகிறேன். அப்போது மொத்தம் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் விபரம் அறிவிக்கப்படும். இந்த முறை கொரோனா தடுப்பூசி முகாம்கள் கிராமங்களிலும் செலுத்தப்படுகிறது. எனவே பொதுமக்கள் அதிக அளவில் வந்து ஊசி போட்டுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. முகாமை தவறாமல் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்தார். 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR