பாரம்பரிய மீன் உணவு விருந்து - முதலமைச்சருக்கு அழைப்பு
பாரம்பரிய தமிழ் மீன் உணவு விருந்திற்கு தமிழக முதல்வருக்கு பழவேற்காடு பெண்கள் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பழவேற்காடு பாரம்பரிய மீன் உணவின் மாதிரி காட்சியை பார்வையிட்டு மற்றும் விருந்து சாப்பிட்டு செல்வதற்கு பழவேற்காடு மீனவப் பெண்கள் சார்பாக முதல்வருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதானி துறைமுகத்தை நிறுத்துவது உட்பட தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்ற தமிழக அரசின் உறுதிமொழிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நாளை மதியம் சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பிரஸ் கிளப்பில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சி குறித்து பழவேற்காடு மீனவப் பெண்கள் வெளியிட்ட அறிக்கையில், "தற்போது நடைபெற்று வரும் சட்டசபை கூட்டத்தொடரின் தொடக்கத்தில், அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்று தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் மக்களுக்கு உறுதியளித்தார். முதல்வருக்கான எங்கள் அழைப்பு என்பது, அவர் நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் வாழ்த்துவதோடு, அனைத்து தேர்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். அதானி துறைமுகத்தின் முன்மொழியப்பட்ட விரிவாக்க திட்டம் நம் தலைக்கு மேலே தொங்கிக்கொண்டிருக்கும் ஒரு வாள் போல.
தேர்தலுக்கு முன்னதாக, இத்திட்டம் ரத்து செய்யப்படுவதாக மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அவரது வாக்குறுதியும், அண்மையில் சட்டசபையில் உறுதியளித்தலும் எங்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். இது ஒரு விருந்துக்கான அழைப்பு, முன்மொழியப்பட்ட துறைமுகத்தின் ஆபத்துகள் பற்றி பேசும் நேரம் இல்லை. முதல்வருடைய வாக்குறுதி சரியான ஒன்றே என்பதைப் புரிந்து கொள்ள எங்கள் உணவை ருசிக்கவும், எங்கள் விருந்தோம்பலில் பங்கேற்கவும் அவரை எங்கள் கிராமத்திற்கு அழைக்கிறோம்" என்று கூறியிருந்தனர்.
ALSO READ கொடநாடு வழக்கு மறு விசாரணைக்கு தடை இல்லை - உச்சநீதிமன்றம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR