நிலச்சரிவு காரணமாக தமிழகம் கேரளா இடையே போக்குவரத்து துண்டிப்பு
போடி மலைப்பாதையில் நிலச்சரிவு தமிழகம் கேரளா இடையே இரவு முதல் போக்குவரத்து துண்டிப்பு
தேனி மாவட்டம் போடி அருகே போடிமெட்டு மலைச்சாலையில் தொடர் கனமழையின் காரணமாக ஒன்பதாவது கொண்டை ஊசி வளைவில் நிலச்சரிவு மற்றும் மரம்சாலையின் நடுவே விழுந்ததால் 12 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு.
போடி அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள போடிமெட்டு மலைச்சாலையில் 17 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டுள்ளது. இந்த மலை சாலையில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வந்த சூழ்நிலையில், இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இதனால் அடிக்கடி நிலச்சரிவு மற்றும் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு பெய்த கனமழையின் காரணமாக போடிமெட்டு மலைச்சாலையில் 9-வது கொண்டை ஊசி வளைவில் நிலச்சரிவு மற்றும் மரமொன்று சாலையின் குறுக்கே விழுந்தது.
இதனால் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கும் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு எந்த வாகனமும் அனுமதிக்கப்படவில்லை. இதனால் நேற்று இரவு முதல் முந்தல் மற்றும் போடிமெட்டு வாகன சோதனைச் சாவடிகளில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்துக் கிடக்கின்றன.
ALSO READ | திருப்பதியில் மழை நிற்கும் வரை தரிசனத்திற்கு வரவேண்டாம்- TTD
நிலச்சரிவு மற்றும் மரத்தை அகற்றும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் மற்றும் பேரிடர் மீட்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் கேரளாவிற்கு அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல இயலாத சூழ்நிலை உருவாகிறதுஏல தோட்ட கூலித் தொழிலாளர்களின் வாகனங்களும் கேரளாவிற்கு செல்ல அனுமதிக்கப்படாமல் சோதனைச் சாவடிகளில் நீண்ட வரையில் காத்திருக்கின்றனர் எனக் கூறப்படுகிறது.
மேலும் 12 மணி நேரத்திற்கு மேலாக கனரக வாகனங்கள் போடிமெட்டு மலைச்சாலையில் செல்லாமல் திருப்பிவிடப்பட்டிருக்கிறது பணிரெண்டு மணி நேரத்திற்கு மேலாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பலர் சோதனைச் சாவடிகளில் காத்துக்கிடக்கின்றனர்.
ALSO READ | 2 நாள் போராட்டத்திற்கு பிறகு 60க்கும் மேற்பட்ட மாடுகளை மீட்ட தீயணைப்புத்துறையினர்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR