செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உட்பட்ட வண்டலூர் பகுதியில் இன்று கவர்னர் வருகைக்காக பந்தோபஸ்து பணியில் இருந்த டிராபிக் போலீசார் வண்டலூர் கிளாம்பாக்கம் பகுதியில் போக்குவரத்தை சீர் செய்து கொண்டிருந்தனர். அப்போது தாம்பரத்தில் இருந்து தஞ்சாவூர் நோக்கி சென்று கொண்டிருந்த இளைஞர்கள் சிலர் காலை சிற்றுண்டி உண்பதற்காக கிளாம்பாக்கம் அருகே உள்ள தள்ளுவண்டி கடையில் சாப்பிடுவதற்காக அவர்கள் வந்த காரை நிறுத்தியுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்போது அங்கு இருந்த டிராபிக் போலீஸ் ஒருவர் கவர்னர் வருகை இருக்கிறது உங்களது காரை ஓரமாக நிறுத்துங்கள் என அவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார். அதனை அவர்கள் ஏற்றுக்கொண்டு அங்கிருந்து காரை அருகில் உள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வளாகத்திற்கு அருகில் நிறுத்தியுள்ளனர். அப்போது கவர்னர் கான்வாய் சென்றவுடன் தள்ளுவண்டி கடையில் சிற்றுண்டி சாப்பிட்டு கொண்டிருந்த இளைஞர்களை நோக்கி வந்த டிராபிக் போலீஸ்  ராஜிவ் காந்தி அங்கு இருந்த நான்கு இளைஞர்களை தகாத வார்த்தையில் திட்டி உள்ளார். மேலும் அதை வீடியோ எடுத்த இளைஞர்களின் செல்போனை பறித்து ட்ராபிக் போலீஸ் ரகலையில் ஈடுபட்டுள்ளார். 


மேலும் படிக்க | Tamil Nadu 10th Result: வெளியானது 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்!


உடனடியாக அந்த பகுதியில் பணியில் இருந்த டிராபிக் எஸ்ஐ ரமேஷ் என்பவரும் மற்றும் சக போலீசார் அனைவரும் இளைஞர்களை சூழ்ந்து அவர்களும் இளைஞர்களிடம் ரகலையில் ஈடுபட்டுள்ளனர்.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது பட்டப் பகலில் போலீசாரின் இந்த செயல் பொதுமக்களிடையே முகம் சுளிக்க வைத்துள்ளது. இணையத்தில் போலீசார் ரகளையில் ஈடுபட்டு வரும் வீடியோ தீயாய் பரவி வருகிறது.