ஈரோடு மாவட்டம்  சத்தியமங்கலம் அருகே உள்ள எரங்காட்டூர் குருவாயூரப்பன் நகரை சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவரது மகன் சுபாஷ் (வயது 24). சொந்தமாக ஆம்புலன்ஸ் வைத்து தொழில் செய்து வந்தார். இவரது தங்கை ஹரிணி(வயது 16). சத்தியமங்கலம் காந்திநகர் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். புதன்கிழமை காலை சுபாஷ் தனது தங்கை ஹரிணியை பள்ளிக்கு கொண்டு சென்று விடுவதற்காக தனது ஸ்கூட்டரில் பின்னால் ஹரிணியை அமர வைத்து சத்தியமங்கலம் - மேட்டுப்பாளையம் சாலையில் சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எரங்காட்டூர் நெசவாளர் காலனி அருகே சென்றபோது இவர்கள் சென்று கொண்டிருந்த ஸ்கூட்டரின் பின்புறம் அதிகமாக வந்த பிக்கப் வேன் ஸ்கூட்டர் மீது மோதியதில் அண்ணன் தங்கை இருவரும் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தனர். இதில் ஹரிணிக்கு தலையில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டது. சுபாஷுக்கு கால் தொடையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அக்கம் பக்கம் இருந்தவர்கள் உடனடியாக இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். தலையில் பலத்த ரத்தக்காயம் ஏற்பட்ட ஹரிணிக்கு சத்தியமங்கலத்தில் முதல் உதவி சிகிச்சை செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


மேலும் படிக்க | விமான நிலையத்தில் உங்கள் லக்கேஜ் சேதமடைந்தால் என்ன செய்ய வேண்டும்?


இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சுபாஷ் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே இந்த விபத்து குறித்து சத்தியமங்கலம் டிஎஸ்பி சரவணன் தலைமையில் பவானிசாகர் இன்ஸ்பெக்டர் அன்னம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்த காவல்துறை தரப்பில் முதல்கட்ட விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. சாலை விபத்தில் காயமடைந்த சுபாஷ் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சத்தியமங்கலம் காந்திநகர் பகுதியில் சேர்ந்த சந்திரன் என்பவரது மகள் மஞ்சு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 


இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் சந்திரன் இவர்களது காதல் திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இதற்கிடையே கடும் ஆத்திரத்தில் இருந்த சந்திரன் தனது மகளை காதல் திருமணம் செய்த சுபாஷை கொலை செய்யும் நோக்கத்தோடு நேற்று சுபாஷ் தனது தங்கையை ஸ்கூட்டரில் அமர வைத்து சென்றபோது ஸ்கூட்டர் பின் தொடர்ந்து வந்த பிக்கப் வேனை சந்திரன் அதிவேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்தி சுபாஷை கொலை செய்ய முயற்சித்தது தெரியவந்துள்ளது. இதில் எதிர்பாராத விதமாக ஸ்கூட்டரில் பின்புறம் அமர்ந்திருந்த பள்ளி மாணவி ஹரிணி தலையில் பலத்த ரத்தக்காயம் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 


இதற்கிடையே பிக்கப் வேனை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய சந்திரன் மற்றும் விபத்து நடந்த இடத்தில் இருசக்கர வாகனத்தில் வந்து சந்திரனை அழைத்துச் சென்ற அவரது மனைவி சித்ரா இருவரும் தலைமறைவாகியுள்ளனர். இருவரையும் போலீசார் தேடி வருவதாக தெரிவித்துள்ளனர். வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இருவர் திருமணம் செய்து கொண்ட நிலையில் மகளை திருமணம்  செய்த மருமகனை மாமனாரே வேன் ஏற்றி கொலை செய்ய முயற்சித்த சம்பவத்தில் அவரது தங்கை பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் படிக்க | 370 நீக்கப்பட்ட பிறகு காஷ்மீரில் பிரதமர் நரேந்திர மோடி! வேளாண் பொருளாதார மேம்பாட்டு திட்டங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ