370 நீக்கப்பட்ட பிறகு காஷ்மீரில் பிரதமர் நரேந்திர மோடி! வேளாண் பொருளாதார மேம்பாட்டு திட்டங்கள்!

Viksit Bharat Viksit Jammu Kashmir : ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கொடுத்துக் கொண்டிருந்த இந்திய அரசமைப்பின் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு காஷ்மீரில் பிரதமர் மோடி...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 7, 2024, 07:05 AM IST
  • ஜம்மு காஷ்மீரில் பிரதமர் நரேந்திர மோடி
  • சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு முதல்முறையாக காஷ்மீரில் பிரதமர்
  • தேர்தலுக்கு முன் ஜம்மு-காஷ்மீர் பயணம்
370 நீக்கப்பட்ட பிறகு காஷ்மீரில் பிரதமர் நரேந்திர மோடி! வேளாண் பொருளாதார மேம்பாட்டு திட்டங்கள்! title=

PM Modi Kashmir Visit: 2019 ஆம் ஆண்டில் 370வது பிரிவு நீக்கப்பட்ட பிறகு, பிரதமர் நரேந்திர மோடி காஷ்மீருக்கு செல்கிறார். இன்னும் சில நாட்களில் மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்படவிருக்கும் நிலையில், வெற்றி பெற அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சி 400 இடங்களைக் கைப்பற்ற இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை அடைய, பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வரும் நிலையில், இன்று காஷ்மீர் செல்லவுள்ளார்.

காஷ்மீரில் பிரதமர் மோடி

பிரதமர் மோடி இன்று (2024 வியாழக்கிழமை மார்ச் 7) காஷ்மீர் செல்கிறார். ஸ்ரீநகரில் பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் என்று அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது. ஸ்ரீநகரின் பக்ஷி ஸ்டேடியத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

யூனியன் பிரதேசமான காஷ்மீரில் விவசாயப் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக சுமார் 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கும் பிரதமர், அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார்.

மேலும் படிக்க | விமான நிலையத்தில் உங்கள் லக்கேஜ் சேதமடைந்தால் என்ன செய்ய வேண்டும்?

பிரதமர் மோடியின் காஷ்மீர் பயணம் தொடர்பான சிறப்புப் பதிவு
காஷ்மீர் சுற்றுப்பயணத்திற்கு முன், பிரதமர் மோடி 'எக்ஸ்' வலைதளத்தில் பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார். 

'வளர்ந்த இந்தியா வளர்ந்த ஜம்மு மற்றும் காஷ்மீர் திட்டத்தில் பங்கேற்க மார்ச் 7 ஆம் தேதி ஸ்ரீநகரில் இருப்பேன். அங்கிருந்து பல்வேறு வளர்ச்சிப் பணிகளை நாட்டுக்கு அர்ப்பணிப்போம். அவற்றில் பெரும்பாலானவை, வேளாண் பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பான ரூ.5000 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள் ஆகும். சுற்றுலா தொடர்பான பல்வேறு பணிகளும் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும்” என்று பிரதமர் பதிவிட்டுள்ளார்.

காஷ்மீரில் பாதுகாப்பு ஏற்பாடுகள்
பிரதமரின் நிகழ்ச்சியையொட்டி, பக்ஷி மைதானத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏனென்றால், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகள் வழங்கும் அரசியல் சாசனத்தின் 370வது பிரிவின் பெரும்பாலான விதிகள் ரத்து செய்யப்பட்ட பிறகு, பிரதமர் மோடி முதல்முறையாக காஷ்மீர் செல்கிறார். இதுபோன்ற சூழ்நிலையில், அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, ஸ்ரீநகரில் அவர் செல்லும் வழியில் உள்ள பல பள்ளிககளுக்கு புதன் மற்றும் வியாழன் ஆகிய இரு தினங்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. வியாழக்கிழமை நடைபெறவிருந்த பொதுத் தேர்வுகள் அடுத்த மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க | பிரதமர் கூறிய அப்பட்டமான பொய்: முதல்வர் ஸ்டாலின் விமர்சன வீடியோ

ஸ்ரீநகரில் பிரதமர் தங்குவதையொட்டி, அனைத்து வழித்தடங்களிலும் ஏராளமான பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அரசு நிகழ்ச்சிக்காக காஷ்மீரில் பிரதமரின் வருகையின் போது மக்கள் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் பல இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

ட்ரோன்கள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் கொண்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தபப்ட்டுள்ளது. பிரதமர் கலந்துக் கொள்ளும் நிகழ்வு நடைபெறும் இடத்தைச் சுற்றி இரண்டு கிலோமீட்டருக்கு பாதுகாப்புப் படையினரின் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சட்டப்பிரிவு 370 நீக்கம்
ஆகஸ்ட் 5, 2019 அன்று, மோடி அரசாங்கம் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்துசெய்தது. அத்துடன் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக்கை இரண்டு தனி யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. கடந்த ஆண்டு 2023 டிசம்பரில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் முடிவை ஒருமனதாக அளித்து உறுதி செய்தது. அதன் பிறகு பிரதமர் மோடி மேற்கொள்ளும் இன்றைய காஷ்மீர் பயணம் அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

மேலும் படிக்க | இந்தியாவின் முதல் நீருக்கடியிலான மெட்ரோ ரெயில் சேவை.. தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News