கொரோனா வைரஸ் முழு அடைப்புக்கு மத்தியில் பேருந்துகள், சரக்கு வாகனங்கள், ஒப்பந்த வாகனங்களுக்கு செலுத்த வேண்டிய ஆண்டு, காலாண்டு வரியினை செலுத்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பான அறிவிப்பினை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக இன்று தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது., 


கொரானா வைரஸ் COVID-19 நோய் பரவலைத் தடுக்க இந்திய அரசு மற்றும் மாநில அரசு அறிவித்த ஊரடங்கு காரணமாக, பேருந்துகள், சரக்கு வாகனங்கள், ஒப்பந்த வாகனங்கள் மற்றும் போக்குவரத்து அல்லாத வாகனங்களின் உரிமையாளர்கள் மோட்டார் வாகன சட்டம் 1974-ன்படி செலுத்த வேண்டிய ஆண்டு வரி காலக்கெடுவான 10.04.2020 மற்றும் காலாண்டு வரி காலக்கெடுவான 15.05.2020 வரியினை குறிப்பிட்ட கால கெடுவிற்குள் செலுத்துவதில் ஏற்படும் சிரமங்களை கருத்தில் கொண்டு, ஆண்டு வரி மற்றும் காலாண்டுக்கான அனைத்து வகை வாகனங்களுக்கான வரியினை அபராதமின்றி செலுத்த 30.06.2020 வரை கால நீட்டிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.