அமைச்சர் ஆய்வு... ஆம்னி பேருந்துகளுக்கு எச்சரிக்கை
ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் எச்சரித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அடுத்தடுத்து நான்கு நாள்கள் விடுமுறை என்பதால் சென்னையில் இருக்கும் வெளியூர்வாசிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். இதற்காக கூடுதல் பேருந்துகள் நேற்று இயக்கப்பட்டன.
அதேசமயம் ஆம்னி பேருந்துகளில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் சென்னை ஆம்னி பேருந்துகளில் தீடிரென ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது, எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என பயணிகளிடம் அவர் கேட்டார். அதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கிறார்கள் என பயணிகள் கூறினர்.
தொடர்ந்து, பயணிகளிடம் வசூலிக்கப்பட்ட கூடுதல் கட்டணத்தை திருப்பி கொடுக்கும்படி பேருந்து உரிமையாளர்களிடம் கூறினார்.
மேலும் படிக்க | அம்பேத்கர் பிறந்தநாள் - உறுதிமொழி ஏற்று முதலமைச்சர் மரியாதை
இந்நிலையில், ஆம்னி பேருந்துகளில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரித்துள்ளார். அமைச்சரின் இந்த நடவடிக்கை மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
மேலும் படிக்க | சமத்துவத்திற்கு குரல் கொடுப்போம் - சமத்துவ நாள் உறுதிமொழி அரசாணை வெளியீடு
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR