சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 132ஆவது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இன்றைய நாள் சமத்துவ நாளாக கடைப்பிடிக்கப்படும் எனவும், சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.
இந்நிலையில், சென்னை அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள உருவப் படத்திற்கு மாலை அணிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். மேலும் சமத்துவ நாளுக்கான உறுதிமொழியையும் அவர் ஏற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் எம்.எல்.ஏக்களும், எம்.பிக்களும் சமத்துவ நாள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
முன்னதாக சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும் சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்கு முறைகளுக்கு எதிராகவும், தொடர்ந்து போராடி,ஒதுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுடைய சமத்துவத்திற்காகவும், வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்து, எளிய மக்களின் உரிமைகளைப் பற்றி விழிப்புணர்வை ஊட்டிய, நம் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளில்,
மேலும் படிக்க | சமத்துவத்திற்கு குரல் கொடுப்போம் - சமத்துவ நாள் உறுதிமொழி அரசாணை வெளியீடு
சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் என்றும், சகமனிதர்களைச் சாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காணமாட்டேன் என்றும், சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்பேன் என்றும் உளமார உறுதி ஏற்கிறேன் என சமத்துவ நாள் உறுதிமொழி அரசாணையாக வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | பீஸ்ட் பார்க்க சென்று காற்று வாங்கிய ரசிகர்கள் - விருதுநகரில் வெறிச்சோடிய தியேட்டர்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR