தஞ்சாவூரில் திமுக சார்பில் ’உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல்’ நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் அக்கட்சியின் பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டிஆர் பாலு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது, 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெறும் 37 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றதாகவும், எஞ்சிய வாக்குகள் அனைத்தும் எதிர்க்கட்சிகளே பெற்றதாகவும் தெரிவித்துள்ளார். அதனால் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் நிச்சயம் பாஜகவை வீழ்த்த முடியும் என டிஆர் பாலு நம்பிக்கையுடன் கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | பாஜகவை முழுமையாக ஆதரிக்கிறேன் - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி!


தொடர்ந்து அவர் பேசும்போது, " இதனடிப்படையில் தான் திமுக தலைவர் முக ஸ்டாலின் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கினார். சிதறிக் கிடக்கும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால்தான் வெற்றி பெற முடியும் என்றும் கூறினார். இதிலிருந்து எத்தனை பேர் விலகிச் சென்றாலும், இந்தியா கூட்டணியிடம் தான் வாக்கு வங்கி உள்ளது. விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை சட்டத்தைக் கொண்டு வருவதற்கான 2013 ஆம் ஆண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.


ஆனால் ஆட்சி மாற்றத்தால் அந்த திட்டம் கொண்டு வர முடியாமல் போனது. மோடி பிரதமராகி 10 ஆண்டுகளாகியும் அச்சட்டத்தை நிறைவேற்றவில்லை. பல்வேறு வகைகளில் தமிழ்நாட்டை மத்திய அரசு புறக்கணித்தும், வஞ்சித்தும் வருகிறது. வெள்ள நிவாரணம் கோரி நாடாளுமன்றத்தில் நான் பேசியபோது, தனது துறைக்கு தொடர்பில்லாத மத்திய இணை அமைச்சர் எல். முருகன் இடையூறு செய்யும் நோக்கில் குறுக்கே, குறுக்கே பேசினார். அதனால், ஒன்றுமே தெரியாத நீங்கள் உட்காருங்கள் எனக் கூறினேன். 


மதம், நிறம் எதுவும் எங்கள் இயக்கத்துக்கு தெரியாது. அனைத்து சமயத்தினரும், ஜாதியினரும் எங்களுக்கு வேண்டியவர்கள்தான். என்னை ஜாதி பார்த்து பேசியதாகக் கூறியது நியாயமா?. கார்ப்ரேட்டுகளுக்கான வரியை மோடி குறைத்துள்ளார். திமுக ஆட்சியில் குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை, நான் முதல்வன் திட்டம், காலை உணவுத் திட்டம், நகைக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் 4.81 கோடி பயனாளிகள் பயடைந்துள்ளனர். 


ஒட்டுமொத்தமாக 6.20 கோடி வாக்காளர்களில் 77 சதவீத பயனாளிகளை முதல்வர் உருவாக்கியுள்ளார். எனவே, நமது முதல்வரை மக்கள் நம்பிக்கை, உறுதி, விருப்பம், வெற்றி, எதிர்காலம் எனக் கருத வேண்டும்" என்றார். இக்கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். 


மேலும் படிக்க | வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி செய்ய பாஜக அரசு சதியா... தொல்.திருமாவளவன் கேள்வி..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ