சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் மூவரும் கண்டிப்பாக இணைய வேண்டும் என்பதே என் விருப்பம் என்று மதுரையில் ஓபிஎஸ் பேட்டி அளித்துள்ளார். மதுரையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்எஸ்வி சித்தன் குடும்ப திருமண நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்து பேசுகையில், நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று கொண்டே இருக்கிறது. பேசிக்கொண்டே இருக்கிறோம். சசிகலா டிடிவி தினகரன் ஓபிஎஸ் கூட்டணியாக இணைவீர்களா? இணைய வேண்டும் என விரும்புகிறேன். உறுதியாக இணைய வேண்டும்.
மேலும் படிக்க | இந்துகளுக்கு எதிரான கட்சியே பாஜக தான்... ஏன் தெரியுமா? - கனிமொழி சொல்லும் பாயிண்ட்
எங்களை பொறுத்தவரையில் பாஜகவை முழுமையாக ஆதரிக்கிறோம். 10 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை பாஜக தந்துள்ளதால் ஆதரவை தவிர மாற்றுக்கருத்துக்கே இடமில்லை. பிரிந்து கிடக்கும் அதிமுகவின் சக்திகள் ஒன்றிணைந்தால் தான் அதிமுகவிற்கு வெற்றி கிடைக்கும். ஈபிஎஸ் வேட்பாளர்களை எதிர்த்து வேட்பாளர்களை களமிறக்குவீர்களா? பொறுத்திருங்கள் என பேசினார். முன்னதாக பேட்டி அளித்து இருந்த அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை எனவும் தமிழகத்தில் அண்ணா திமுக தலைமையில் சிறப்பான கூட்டணி அமையும் என்றும் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நடைபெற்ற மாற்றுக் கட்சியினர் இணைப்பு விழாவில் பேசி இருந்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் பிரசித்திப்பெற்ற தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் செல்வ முத்துக்குமாரசுவாமி, அங்காரகன், தன்வந்திரி சித்தர் ஆகிய சுவாமிகள் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகின்றனர். இக்கோயில் நோய் தீர்க்கும் ஸ்தலமாகவும், நவக்கிரகங்களில் முக்கிய ஒன்றான முக்கிய ஒன்றான செவ்வாய் பரிகார ஸ்தலமாகவும் விளங்கி வருகிறது. கோயிலில் உள்ள சித்தா மிருத தீர்த்த குளத்தில் நீராடி சுவாமியை வழிபட்டால் 4 ஆயிரத்து 448 நோய்கள் தீரும் என்பது ஐதீகம். சிறப்பு பெற்ற இக்கோயிலுக்கு முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி வருகை புரிந்தார்.
முன்னதாக கோயில் நிர்வாகம் சார்பில் கட்டளை தந்திரம் ஸ்ரீமத் திருநாவுக்கரசு சுவாமிகள் , சிவாச்சாரியார்கள் பூரண கும்ப மரியாதை வழங்கி வரவேற்றனர். தொடர்ந்து கற்பக விநாயகர், வைத்தியநாதர்சுவாமி ,செல்வ முத்துக்குமாரசுவாமி, தையல்நாயகி அம்மன், அங்காரகன் ஆகிய சுவாமி சன்னிதிகளில் சிறப்பு வழிபாடு செய்து தரிசனம் செய்தார்.அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ்.மணியன் எம்.எல். ஏ, அதிமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் ,மாவட்ட அவைத்தலைவர் பி.வி. பாரதி, முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், முன்னாள் எம்.எல்.ஏக்கள் ராதாகிருஷ்ணன், ராமராமநாதன், சக்தி, முருகுமாறன், கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் கே.எம்.நற்குணன், தொழிலதிபர் மார்க்கோனி மற்றும் ஏராளமான அதிமுகவினர்கள் உடன் இருந்தனர்.
மேலும் படிக்க | இந்தியாவின் பணக்கார மாநிலங்களின் பட்டியல்! தமிழ்நாட்டிற்கு எந்த இடம் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ