முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்துவரும் நளினி, ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு, ”கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரும், உச்ச நீதிமன்றத்துக்குரிய பிரத்யேக அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்யப்படுகிறார்கள்" என்று தீர்ப்பளித்தது.  இதைத்தொடர்ந்து, ஆறு பேரும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். 


தொடர்ந்து, விடுதலை செய்யப்பட்ட முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் ஆகியோர் தற்போது இலங்கை சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை சந்திப்பதற்காக, சென்னை புழல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நளினி உள்ளிட்ட 7 பேர், திருச்சி சிறப்பு முகாமிற்கு இன்று (நவ. 14) வருகை தந்துள்ளனர். அவர்கள் தற்போது முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள நான்கு பேரிடமும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.


மேலும் படிக்க | தமிழக மக்கள் எங்கள் மீது செலுத்திய அன்பிற்கு நன்றி: செய்தியாளர் சந்திப்பில் நளினி


இந்நிலையில், திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் முகாம் நுழைவாயிலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் உண்ணாவிரதம் மேற்கொள்ளவில்லை. அவர்கள், நடைபயிற்சி மேற்கொள்வது உள்ளிட்ட சில வசதிகளை கேட்டனர். 


அவை உடனுக்குடன் செய்து தரப்பட்டுள்ளது. நால்வரில் மூன்று பேர் இலங்கை செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்களை இலங்கை நாட்டிற்கு அனுப்ப அனுமதி கேட்டுள்ளோம். முருகனுக்கு இங்கே வழக்கு இருப்பதால் அவர் தற்போது செல்வதற்கு வாய்ப்பில்லை" என தெரிவித்தார்.


முன்னதாக, முருகன், சாந்தன் உள்ளிட்ட 4 பேரும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியானது. மேலும், தங்களை தனி அறையில் அடைத்து வைக்கக்கூடாது என்றும் சக வெளிநாட்டு அகதிகளை நடத்துவது போல் தங்களையும் நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. 


மேலும் படிக்க | சிறை வாசம் முடிந்தது... 30 ஆண்டுகளுக்கு பிறகு நளினி உள்ளிட்ட 6 பேரும் விடுதலை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ