திருச்சி மாவட்டம் துறையூர் மதுராபுரி கிராமத்தை சோ்ந்தவா் ஞானமலா், இவரது 17 வயது மகன் துறையூரில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 5ஆம் தேதி விளையாடுவதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றவர், இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் உறவினர்கள் வீடு,  நண்பர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் மாணவரை தேடினர்.  எங்கு தேடியும் இல்லாததால் மாணவர் எங்கே சென்றார் என்பது குறித்த எந்த வித தகவலும் கிடைக்கவில்லை. இதனையடுத்து மாணவனின் நண்பர்களிடம் விசாரித்ததில் அவன் நண்பர்களுடன் விளையாட செல்லவில்லை எனவும், மேலும் அதே பள்ளியில் பணியாற்றும் மாணவனின் வகுப்பு ஆசிரியை சர்மிளாவும் மாயமாகி இருப்பது தெரிய வந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | அம்மா உன்ன விட்டு போறதுக்கு 'sorry': ஆசிரியர் திட்டியதால் கல்லூரி மாணவி தற்கொலை


 


இதனையடுத்து நேற்று மாணவரின் பெற்றோர் துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரில் தனது மகனை காணவில்லை என்றும் மாணவர் காணாமல் போன அன்று அவரின் வகுப்பு ஆசிரியையும் காணாமல் போயிருப்பதால் அதே பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றும் சிக்கந்தம்பூர் பகுதியை சோ்ந்த சர்மிளாவுடன் அவா் சென்றிருக்கலாம் என்று சந்தேகப்படுவதாகவும் மாணவரின் தாயார் சந்தேகம் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் துறையூர் காவல்துறையினா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  


மாணவர் படித்த பள்ளியில் போலீசார் விசாரித்ததில் அதே நாளில் ஆசிரியையும் மாயமானது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் துறையூர் அருகே உள்ள சிக்கந்தம்பூர் கிராமத்தை சேர்ந்த அந்த ஆசிரியை சர்மிளா எம்ஏ., பிஎட்., படித்து விட்டு கடந்த 6 ஆண்டாக அந்த பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி கொண்டிருப்பதும் தெரிய வந்தது.  இருப்பினும் ஆசிரியை மாயம் தொடர்பாக இதுவரை போலீசில் யாரும் புகார் தெரிவிக்கவில்லை. மாணவரும் ஆசிரியையும் ஒரே நாளில் மாயமாகி உள்ளதால் இருவரும் சேர்ந்து சென்றிருக்கலாம் என மாணவரின் தாயார் எழுப்பிய சந்தேகம் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


மேலும் படிக்க | தமிழகத்தில் ஒரே நாளில் 79,599 வழக்குகளுக்கு தீர்வு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR