கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகையில் திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. சிறுமுகை பேரூர் கழக திமுக சார்பில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திமுகவின் கொள்கை பரபரப்பு செயலாளர் திருச்சி சிவா பங்கேற்று சிறப்புரையாற்றினார். பொது கூட்டத்தில் பேசிய திருச்சி சிவா, மத்திய அரசு அனைத்து அதிகாரத்தையும் தன்னிடம் வைத்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இந்திய மருத்துவ கழகத்தை ஆணையமாக மாற்றி நீட்டை நடத்துவதாக குற்றம் சாட்டினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீட் தேர்வால் தனியார் நீட் பயிற்சி நிறுவனங்கள் தான் லட்சக்கணக்கில் கல்லாகட்டுவதாக கூறிய திருச்சி சிவா, 15 லட்சம் கொடுத்து பயிற்சி எடுத்தால் தான் நீட் தேர்வு வெற்றி என்ற நிலை உருவாகியுள்ளது என கவலை தெரிவித்தார். எனவே இந்த நீட் தமிழக மக்களுக்கு தேவை இல்லை. அது கூட்டாட்சிக்கும் மாநில சுயாட்சி க்கு எதிராகவும் அமைந்துள்ளதாகவும் பேசினார். 


மேலும் படிக்க | 2024-ல் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் நிச்சயம் நீட் இருக்காது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


மேலும், மருத்துவத்தில் நீட் தேர்வை தொடர்ந்து  விரைவில்  மருத்துவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வு வர உள்ளதாகவும் அதில் எழுதி தேர்வு பெற்றால் தான் இனி மருத்துவம் பயின்றாலும் அதற்க்கான சான்றிதழ் பெற முடியும். மேற்கொண்டு வேறு பயிற்சிகள் மேற்கொள்ள முடியும் என்பதை மத்திய அரசு உருவாக்கி வருவதாகவும், இதனால் மருத்துவம் பயின்றாலும் அதிலும் ஒரு சிக்கலான விஷயத்தை மத்திய அரசு புகுத்தியுள்ளதாக குற்றம்சாட்டினார். திருச்சி சிவா தெரிவித்திருக்கும் இந்த தகவல் மருத்துவ மாணவர்களிடையே மேலும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. ஏற்கனவே நீட் தேர்வில் வெற்றி பெற்றும் உரிய கட்ஆஃப் மதிப்பெண் கிடைக்காமல் பலர் மருத்துவ மாணவர் கனவை தொலைத்துவிட்டு வேறு துறையை நோக்கி கவனம் செலுத்தி வருகிறார்கள்.


இதில் இன்னொரு சுமையாக நெக்ஸ்ட் தேர்வும் மருத்துவ மாணவர்கள் எழுத வேண்டும் என மத்திய அரசு திட்டமிட்டிருப்பது, மாணவர்களின் மருத்துவக் கனவை முளையிலேயே கிள்ளி எறியும் செயலாக இருக்கும் என பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர். 


மேலும் படிக்க | நாங்குநேரி: சின்னதுரையை கனிமொழி எம்பி நேரில் சந்தித்து நலம் விசாரிப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ