2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி அதிகாலை, அப்படியொரு சம்பவம் நிகழும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. கடல் தாயின் மடியில் வாழும் மக்கள், எப்போதும்போல், ஆழ்ந்து அசந்து தூங்கிக் கொண்டிருந்தனர். வானாளவிய கனவுகளுடன் குடிசைகளிலும், படகின் மீதும் படுத்துறங்கியவர்கள் மீது, திடீரென உப்புத் தண்ணீரின் வாசம், வழக்கத்துக்கு மாறாயிருந்தது. என்னவென்று யோசிப்பதற்குள், படகுகள் கவிழ்ந்து, வீடுகள் மூழ்கி, உறவுகள் எல்லாம் சடலங்களாக கிடந்தனர். சுதாரித்த பிறகு தான் தெரிந்தது, சுனாமி (TSunami) வந்தது என்று. ஆம், ஆழிப்பேரலை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால், 14 நாடுகளில் சுனாமி உருவானது. கரையோரம் வசித்த மக்கள் ஏறத்தாழ சுமார் 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் உயிரிழந்தார்கள், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் போனார்கள். இந்தோனேஷியா, இலங்கை, மாலத்தீவு, தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் ஆழிப்பேரலையின் கோரத்தாண்டவம் அரங்கேறியிருந்தது.


ALSO READ | விழுப்புரம்: சிறுவன் இறந்த சம்பவத்தில் புதிய CCTV காட்சி வெளியீடு! சிக்கப்போகும் அந்த இருவர் யார்?


தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாக்குமரி வரை கடற்கரையோரம் வசித்த மக்கள் ஆழிப்பேரலையில் சிக்கினர். இந்த கோர விபத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நாகையில் மட்டும் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை சுனாமி காவு வாங்கிச் சென்றது. குடும்பத்தை இழந்த குழந்தைகள், குழந்தைகளை இழந்த பெற்றோர், வீடுகளையும், படகுகளையும் இழந்த மீனவர்கள் என கடற்கரையோரம் வசித்த மக்கள் சந்தித்த இழப்புகள் ஏராளம். 17 ஆண்டுகள் ஆன பின்பு இன்றும் அந்த விபத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மக்களால் மீண்டு வரமுடியவில்லை. ஆனால், ஆண்டுதோறும், தவறாமல் இந்நாளில், உயிரிழந்த தங்களின் உறவுகளுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


இன்று சுனாமியின் 17 ஆம் நாள் நினைவு நாளையொட்டி தூத்துக்குடி திரேஸ்புரத்தில் மீனவர்கள் ஒன்றாக கூடி அஞ்சலி செலுத்தினர். கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர்தூவியும் அஞ்சலி செலுத்திய அவர்கள், இனிமேல் இப்படியொரு பேரழிவை கொடுத்துவிடக்கூடாது என கடல்தாயிடம் வேண்டிக்கொண்டனர். மேலும், நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் யாரும் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. அப்போது பேசிய மீனவர் இசக்கிமுத்து, "சுனாமி பேரழிவின் போது ஏராளமான உயிர்சேதமும், படகுகளும் சேதம் அடைந்தன. அந்த பேரிழிப்பு நடந்து 17 ஆண்டுகள் நிறைவடைகிறது.  இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று ஒருநாள் நாட்டுப்படகு,விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை" என்றார். இசை முழக்கமாக கேட்கும் அலையின் ஓசை, இன்று ஒருநாள் மட்டும் அவர்களுக்கு இடிமுழக்கமாகவே கேட்கிறது. 


ALSO READ | ALSO READ | ரயில்வே தண்டவாளத்தில் வாலிபர் சடலம்: கொலையா? தற்கொலையா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR