பைக்குக்கும் பெயில் போடுகிறேன் என டிடிஎஃப் வாசன் ஆவேசம்..!
விபத்தில் சிக்கிய தனது வாகனத்தை பார்க்க ஆசைபட்டு அனுமதி கேட்டபோது, காவல்துறை அனுமதி மறுத்தது. இதனால் ஆவேசமடைந்த டிடிஎஃப் வாசன், பைக்குக்கும் பெயில் போடுறேன் என புலம்பினார்.
டிடிஎஃப் வாசன் காஞ்சிபுரம் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு இரு சக்கர வாகனத்தில் வரும்போது விபத்தில் சிக்கினார். அதிவேகமாக வரும்போது பைக்கை கன்ட்ரோல் செய்ய முடியாமல் விபத்தில் சிக்கிய அவர், படுகாயமடைந்தார். அதன்பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வாசன் விபத்தில் சிக்கியது அவருடைய அதிகவேகமே காரணம் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்ததுடன் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனால் பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் சாலையில் வாகனத்தை ஓட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு டிடிஎஃப் வாசன் கைது செய்யப்பட்டார்.
மேலும் படிக்க | கலைஞர் மகளிர் உரிமை தோகை பெற மேலும் 7.35 லட்சம் பேர் தேர்வு? லேட்டஸ்ட் அப்டேட்
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு ஜாமீன் மனுக்கள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டு வந்தன. அவரும் சளைக்காமல் நீதிமன்ற படிகள் ஏறி ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்து கொண்டே இருந்தார். இதனையடுத்து நிபந்தனையுடன் கூடிய ஜாமீனை நீதிமன்றம் வழங்கியுள்ளது. இதனால், தினமும் காஞ்சிபுரம் அடுத்த பாலுச்செட்டி சத்திரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறார்.
அவ்வகையில் இன்று கையெழுத்திட வந்த டிடிஎஃப் வாசன் விபத்தில் சிக்கிய தனது வாகனத்தை பார்வையிட அனுமதி கிடைக்குமா என காவல்துறையிடம் கேட்டார். அதற்கு அனுமதி இல்லை என கூறியதால், மன வருத்தத்துடன் வெளியே வந்து பைக்குக்கும் பெயில் போடலாமா என புலம்பிக்கொண்டே சென்றார். பின்னர், தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்த வாசன், பாதுகாப்பாக தீபாவளி கொண்டாட ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். வழக்கம்போல் சிறுவர்களின் கூட்டம் மற்றும் ஆண், பெண் ரசிகர்களும் அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ