அதிமுக அம்மா அணிக்கு புதிய நிர்வாகிகளை நியமித்தார் டி.டி.வி. தினகரன். இதைக்குறித்து பெசன்ட் நகரிம் உள்ள இல்லத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது, 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வரும் 2019-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து இந்த நிர்வாகிகள் மாற்றம் செய்யப்பட்டது எனவும், இந்த நிர்வாகிகள் மாற்றங்களுக்காக 2 மாதமாக வீட்டில் இருந்தே படியே செயல் பட்டேன்.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா திட்டமிட்டே படி நடைபெறும். அதில் எந்த வித மாற்றமும் இல்லை. 


நிர்வாகிகளை கட்சியில் சேர்ப்பதும், நீக்குவதும் அதிமுக அம்மா அணியின் பொதுச்செயளார் தான் அதிகாரம் உண்டு. கட்சியின் நிர்வாகிகளின் வேண்டுகோளை ஏற்று தான் சிறிது காலம் தள்ளி இருந்தேன். மற்றபடி எப்ப வேண்டுமானாலும் நான் அலுவலகம் செல்வேன் எனக் கூறினார்.


மேலும் பிரிந்த அணிகள் ஓன்று சேர உழைக்கின்றோம், விரைவில் ஒரு நல்ல செய்தியை கேட்பீர்கள் எனவும் கூறினார்.