நேற்று நடந்த ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 89,013 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் ஆர்.கே.,நகர் இடைத்தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து அதிமுக நிர்வாகிகள் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று முக்கிய ஆலோசனை நடத்தினர். 


இந்த கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர். அந்த கூட்டத்தில் தொடர்ந்து தினகரனை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து நடவடிக்கை ஆலோசிக்கப்பட்டது.


கூட்டம் நடத்த அதிமுக தலைமை அலுவலகத்தில், "ஸ்லீப்பர் செல் துரோகிகளே வெளியேற்றுங்கள்" என மகளிர் அணியினர் கோஷம் எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தில், தினகரன் ஆதரவாளர்களான தங்கதமிழ்செல்வன், கலைராஜன், வெற்றிவேல், பாப்புலர் முத்தையா, வேலூர் பார்த்திபன், ரெங்கசாமி ஆகியோரை கட்சியில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், 


பணப்பட்டுவாடா குறித்து விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தோம். ரூ.20 நோட்டை வைத்துக்கொண்டு தினகரன் வீட்டு வாசலில் மக்கள் காத்திருக்கின்றனர். டிடிவி தினகரன் ஒரு மாயமான். அதிமுகவில் டிடிவி தினகரனை விட நான் 18 ஆண்டுகள் சீனியர். பொய் சொல்லி ஏமாற்றி வருபவர் தான் டிடிவி தினகரன். ஜெயலலிதாவை பார்க்க எங்களை ஏன் அனுமதிக்கவில்லை? 


முதல்வர் எடப்பாடி பேச்சு,


கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுகவின் உண்மையான தொண்டன் துரோகம் செய்யமாட்டான். ஆர்.கே.நகரில் அதிமுகவுக்கு கிடைத்தது தோல்வியே அல்ல என்றும் மக்களை ஏமாற்றி மாயாஜாலம் செய்து வெற்றி பெற்றுள்ளார்.


இவ்வாறு கூறினார்கள்.