சிறுமியை கடத்திச் சென்ற டியூசன் மாஸ்டர் : உதவிதேடும் கோவை மாநகர போலீசார்!
கோவையில் பள்ளி மாணவியை கடத்தி சென்ற டியூசன் மாஸ்டர் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்று கோவை மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர்.
கோவை : கோவையில் பள்ளி மாணவியை கடத்தி சென்ற டியூசன் மாஸ்டர் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்று கோவை மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர். கோவை கமிஷனர் அலுவலகத்தில் சரவணம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கங்கவெளி பகுதியை சேர்ந்தவர் மணிமாறன் ( 40). இவர் ஏற்கனவே 2 முறை திருமணமானவர். இந்த நிலையில், முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு 2வது மனைவி குழந்தையுடன் கடந்த 2018ம் ஆண்டு வரை சேலத்தில் இருந்துள்ளார்.
ALSO READ திண்டுக்கல் சிறுமலைக்கு வரும் வாகனங்களுக்கு இனி கட்டணம்!
மேலும், ஆரம்பப் பள்ளி ஆசிரியராக இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பின்பு 2019ம் ஆண்டு நிதி நிறுவனம் தொடங்கி அதிக வட்டி தருவதாக பலரை ஏமாற்றி தலைமறைவாக வாழ்ந்துள்ளார். பின்னர் கோவை சரவணம்பட்டி பகுதியில் தனியார் டியூசன் சென்டரில் கணிதம், கணிப்பொறி, நடனம் மற்றும் மேஜிக் ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.
இதனிடையே மணிமாறன் தங்கியிருந்த வீட்டின் அருகில் 12ம் வகுப்பு படிக்கும் சிறுமி இருந்தார். அப்போது சிறுமி மணிமாறனிடம் டியூசன் சென்றுள்ளார். நாளடைவில் சிறுமியை மயக்கி வீட்டில் இருந்து அவரை கடத்தி சென்றுள்ளார். இதுகுறித்து நடத்திய விசாரணையில் பழனி, கொடைக்கானல், திண்டுக்கல், மதுரை, திருச்சி, பொள்ளாச்சி என பல இடங்களில் சுற்றித்திரிந்தது தெரியவந்தது. பொதுமக்கள் இவரை எங்கு பார்த்தாலும் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இதுபோன்ற நபர்களிடம் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று கூறினார்.
ALSO READ வாந்தி, வயிற்றுப்போக்கு காரணமாக இரு குழந்தைகள் உயிரிழப்பு; காவல்துறையினர் விசாரணை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR