திண்டுக்கல் சிறுமலைக்கு வரும் வாகனங்களுக்கு இனி கட்டணம்!

திண்டுக்கல்லில் உள்ள சிறுமலை சுற்றுலா தளத்திற்கு வரும் வாகனங்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Dec 8, 2021, 01:53 PM IST
  • அடர்ந்த காடுகளும், நல்ல சீதோஷன நிலையையும் கொண்ட சிறுமலை கடல் மட்டத்திலிருந்து 1600 மீட்டர் உயரத்தில் உள்ளது.
  • மினி கொடைக்கானல் என்று அழைக்கப்படும் சிறுமலை திண்டுக்கல் வாசிகளின் சுற்றுலா தளமாக விளங்குகிறது.
திண்டுக்கல் சிறுமலைக்கு வரும் வாகனங்களுக்கு இனி கட்டணம்! title=

60000 ஏக்கர் பரப்பளவுள்ளவை (200 கி.மீ) கொண்ட சிறுமலை திண்டுக்கல்லிலிருந்து 25 கி.மீ, மதுரையிலிருந்து 40 கி.மீ தொலைவில் உள்ளது. உயர்ந்த மலைகளைக் கொண்ட சிறுமலை  கொடைக்கானல் மலையைவிட அதிகமாக 18 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டது. இங்கு கில்லாக் இன்டர்நேஷனல் பள்ளி உள்ளது. அடர்ந்த காடுகளும், நல்ல சீதோஷன நிலையையும் கொண்ட சிறுமலை கடல் மட்டத்திலிருந்து 1600 மீட்டர் உயரத்தில் உள்ளது.

sirumalai

மினி கொடைக்கானல் என்று அழைக்கப்படும் சிறுமலை திண்டுக்கல் வாசிகளின் சுற்றுலா தளமாக விளங்குகிறது.  மேலும், சிறுமலைக்கு தமிழகத்தின் பிற பகுதிகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர்.  இதன் காரணமாக சிறுமலையில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக அங்கு சிறுமலை சூழல் மேம்பாட்டு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு வனத்தை பாதுகாத்தல் மற்றும் சுற்றுலாவை எவ்வாறு மேம்படுத்துவது குறித்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

sirumalai

சுற்றலா தளத்தை மேம்படுத்த முதற்கட்டமாக சிறுமலைக்கு சுற்றுலாவுக்கு வரும் வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்ய முடிவு செய்யப்பட்டது.  அதன்படி கடந்த வாரம் முதல் சிறுமலை ஊராட்சி சார்பில் சிறுமலைக்கு சுற்றுலா வரும் இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.20, 4 சக்கர வாகனங்களுக்கு ரூ.50, கனரக வாகனங்களுக்கு ரூ. 100, ஜே.சி.பி, கிட்டாச்சி, போர்வெல் வாகனங்களுக்கு ரூ.500 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு வசூல் செய்யபடுகிறது.  

ALSO READ | Police: சினிமா பாணியில் கள்ளநோட்டு கும்பலை துரத்தி பிடித்த தமிழக போலீஸ்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News