டிவிட்டர் டிரெண்டிங்கில் இந்திய அளவில் தஞ்சாவூர் பெரிய கோவில் இடம்பிடித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ள தஞ்சை பெரிய கோவில் மத்திய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர் கள், சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் நாள்தோறும் வந்த வண்ணம் உள்ளனர்.


தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் 23 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (புதன்கிழமை) நடக்கிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி குடமுழுக்கு விழாவை தரிசித்தனர். சுமார் 23 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் குடமுழுக்கு என்பதால் பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் மிக பிரம்மாண்டமாக செய்யப்பட்டுள்ளன. 


இந்நிலையில் பிரபல சமூக வலைதளமான டிவிட்டர் டிரெண்டிங்கில் தஞ்சாவூர் பெரிய கோவில் டிரெண்டிங் ஆகி உள்ளது. #ThanjavurBigTemple என்ற பெயரில் ஹேஷ்டாக் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஹேஷ்டாக் பதிவிட்டு  குடமுழுக்கு தொடர்பான வீடியோக்கள், போட்டோக்கள், தஞ்சை பெரிய கோவிலின் போட்டோ ஆகியவற்றை பகிர்ந்தும் வருகின்றனர்.