ஆவடியில் ஓய்வு பெற்ற ராணுவ வீரரும் சித்த மருத்துவர் மற்றும் அவரது மனைவியை வீடு புகுந்து வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நகை பணம் கொள்ளையடிக்க கொலை நடைபெற்றதா அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக கொலை செய்யப்பட்டார்களா என்ற கோணத்தில் போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர். தொடர் கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருவதால், ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.  ஆவடி அருகே மிட்டனமல்லி காந்தி மெயின் ரோடு இரண்டாவது குறுக்குத் தெரு பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரரும் சித்தா மருத்துவரான சிவன் நாயர். இவர் வீட்டிலேயே மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி பிரசன்னா குமாரி. இவர் மத்திய அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | அடுக்குமாடி கட்டத்தின் விளிம்பில் சிக்கி உயிருக்கு போராடிய குழந்தை!


இவரது மகன் இதே பகுதியில் சித்த மருத்துவம் பார்த்து வருகிறார். இவரது மகள் வெளிநாட்டில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வழக்கம் போல இன்று வீட்டில் சிகிச்சைப் பார்த்து வந்துள்ளார். சிகிச்சை பார்ப்பது போல வந்த மர்ம நபர்கள் சிவன் நாயர் மற்றும் அவரது மனைவி பிரசன்னா குமாரி ஆகியோரை கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளனர். இது குறித்து அக்கம் பக்கத்தினர் முத்தாபுதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முத்தாபுதுபேட்டை போலீசார் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது வட மாநில வாலிபர்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்ற நிலையில் வீட்டிலிருந்த நகை பணங்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக என்றும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் சம்பவ இடத்திற்கு டாபி என்கிற மோப்ப நாயும், தடயவியல் நிபுணர்களும் நேரில் வந்து தீவிரமாக ஆய்வு மேற்கொண்டனர். மத்திய பாதுகாப்பு துறைக்கு சொந்தமான பல்வேறு அரசு நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதியில் மாலை நேரத்தில் வெகு இயல்பாக வந்து கணவன் மனைவி ஆகியோர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட விவகாரம் அப்பகுதியில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள சூழலில் ஆவடி காவல் ஆணையரக துணை ஆணையர் அய்மன் ஜமால் தலைமையில் சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டு விசாரணை முடிக்கி விடப்பட்டது. 


குடும்ப தகராறு காரணமாக கொலை நடத்ததபட்டு இருக்குமா என்ற கோணங்களிலும் முத்தாபுதுப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை சேகரித்து வரும் போலீசார் மோப்ப நாய் உதவியுடன் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் கொலை அரங்கேறிய வீட்டில் தடயவியல் நிபுணர்கள் சோதனை செய்து தடயங்களை சேகரித்து வருகின்றனர் மேலும் சம்பவ இடத்திற்கு ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் நேரடியாக பார்வையிட்டு கொலையாளிகளை துரிதமாக பிடிக்க உத்தரவிட்டார்.


மேலும் படிக்க | சமாதியில் இளைஞரின் தலை... இன்ஸ்டாவில் பிறந்தநாள் வாழ்த்து பதிவிட்டதால் கொலையா? - பகீர்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ