சமாதியில் இளைஞரின் தலை... இன்ஸ்டாவில் பிறந்தநாள் வாழ்த்து பதிவிட்டதால் கொலையா? - பகீர்

Tamil Nadu Crime Latest News: சடலம், துண்டிக்கப்பட்ட கைகள் ஒருபுறம், சுடுகாடு சமாதியில் துண்டிக்கப்பட்ட தலை மறுபுறம் என திருவள்ளூரில் இன்று நடந்த கொடூர குற்றச்சம்பவம் குறித்து இதில் காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Apr 28, 2024, 06:18 PM IST
  • மீஞ்சூர் காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • கொலையானவர் 26 வயதான அஸ்வின்குமார் என தெரியவந்துள்ளது.
  • பழைய கொலைக்கு பழிதீர்க்கப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை
சமாதியில் இளைஞரின் தலை... இன்ஸ்டாவில் பிறந்தநாள் வாழ்த்து பதிவிட்டதால் கொலையா? - பகீர்

Tamil Nadu Crime Latest News: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த மீஞ்சூர் பஜார் பகுதியில் அதிகாலை நேரத்தில் துணியால் சுற்றப்பட்ட சடலம் ஒன்று கைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் இருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் மீஞ்சூர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர். 

Add Zee News as a Preferred Source

சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இரண்டு கைகள் துண்டிக்கப்பட்டும், முகம் சிதைக்கப்பட்டும் சரமாரியாக வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் ரத்தக் கறைகள் ஏதுமில்லாத நிலையில் வேறு எங்கோ கொலை செய்து விட்டு மருத்துவமனையில் பயன்படுத்துவது போன்று பச்சை நிற படுக்கை விரிப்பால் சடலத்தை சுற்றி கொண்டு வந்து வீசி சென்றது காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் கொலை செய்யப்பட்ட நபர் யார் என்பது குறித்த அடையாளத்தை கண்டறியும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். 

சமாதியில் தலை...

இதனிடையே சோழவரம் அடுத்த பெருங்காவூர் கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் அஜீத்குமார் என்பவரது சமாதியில் துண்டிக்கப்பட்ட தலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று காவல்துறையினர் தலையை கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது வஞ்சிவாக்கம் கிராமத்தை சேர்ந்த அஸ்வின்குமார் (26) என்பது தெரியவந்தது.

மேலும் படிக்க | உதகையில் சிசிடிவி கேமராக்கள் ஏன் வேலை செய்யவில்லை? அதிகாரிகள் விளக்கம்!

அஸ்வின்குமார் கூலி வேலை செய்து வந்ததும், அண்மையில் காதல் திருமணம் நடந்ததும் தெரியவந்தது.  மூட்டையில் கண்டெடுக்கப்பட்ட சடலம் அஸ்வின்குமார் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர் உடற்கூறு ஆய்விற்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இன்ஸ்டாவில் வாழ்த்து பதிவு

இந்த சம்பவம் குறித்து மீஞ்சூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கடந்தாண்டு செங்குன்றம் அருகே கண்ணம்பாளையம் பகுதியில் உடற்பயிற்சி கூடத்தில் முன்விரோதம் காரணமாக மூவர் கொலை செய்யப்பட்டனர். கொலை செய்யப்பட்ட பெருங்காவூரை சேர்ந்த அஜீத்குமார் என்பவரது சமாதியின் மீது கொலை செய்து துண்டிக்கப்பட தலையை வைத்து பழீதீர்த்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

அஜீத்குமார் உள்ளிட்ட மூவர் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி கருப்பு அஜீத். இவருடைய பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டுள்ளது. அதில் அஸ்வின்குமார் தம்முடைய இன்ஸ்டாவில் கருப்பு அஜீத்திற்கு பிறந்தநாள் வாழ்த்து பதிவிட்டதால் கடந்தாண்டு கொலையான அஜீத்குமாரின் நண்பர்கள் இதனை கண்டு பழிதீர்ப்பதற்காக அஸ்வின்குமாரை கொடூரமாக கைகளை துண்டித்தும், தலையின் ஒரு பகுதியை துண்டித்தும் சமாதியில் வைத்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. 

தீவிர விசாரணை

இன்ஸ்டாவில் பதிவிட்டதால் மட்டுமே கொலை அரங்கேறியதா அல்லது வேறு ஏதேனும் முன் பகை உள்ளதா எனவும் தொடர்ந்து காவல்துறையினர் புலன்விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மூவரை பிடித்து மீஞ்சூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே நேற்று மாலை அஸ்வின்குமார் வீட்டில் இருந்தபோது நண்பர்கள் சிலர் அழைத்து சென்றதாகவும் அவர்கள் குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இளைஞர் தலை துண்டித்து சமாதியில் வைத்து அரங்கேறிய கொலை சம்பவம் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க | வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் தான் - அமைச்சர் ரகுபதி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News